நியுசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – மூன்று தொடக்க வீரர்கள் தேர்வு !

Last Modified திங்கள், 13 ஜனவரி 2020 (08:02 IST)
ஜனவரி 24 ஆம் தேதி இந்தியா வந்து விளையாட இருக்கும் நியுசிலாந்து தொடருக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி 20 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் வரும் ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார் மற்றும் ஷர்துள் தாகூர் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணி :-
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குலதீப் யாதவ், யஷ்வேந்தர சஹால், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமத் ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா.

தவான், ரோஹித், ராகுல் ஆகிய 3 தொடக்க ஆட்டக்காரர்கள் இருப்பதால் எந்த இருவர் விளையாடுவர் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :