ஆப்கானிஸ்தான் அணி மீண்டும் வெற்றி! வங்கதேசத்தை வீழ்த்தியது

sivalingam| Last Modified திங்கள், 16 செப்டம்பர் 2019 (06:33 IST)
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜிம்பாவே ஆகிய் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஜிம்பாவே அணியை வென்ற ஆப்கானிஸ்தான் தனி நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கன் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியது. முகமது நை அபாரமாக விளையாடி 84 ரன்களும் அஸ்கர் ஆப்கன் 40 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் எடுத்தது.


165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முகமது நபி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இதனையடுத்தி இரண்டு வெற்றிகளை பெற்ற ஆப்கன் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஒரு வெற்றியை பெற்ற வங்கதேசம் இரண்டாவது இடத்திலும் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாத ஜிம்பாவே கடைசி இடத்திலும் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :