“அகமதாபாத் விக்கெட்டைப் போல இது செத்தக்களமாக இருக்காது. பந்து நன்கு எழும்பும், அதே வேளையில் இரண்டாவது, மூன்றாவது நாளில் நன்கு திரும்பும்” என்று ஹைதராபாத்திலுள்ள இராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதான ஆட்டக்களத்தைப் பார்த்த நியூ ஸீலாந்து அணியின் துணைத் தலைவர் ராஸ் டெய்லர் கூறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும்.