ஐபிஎல் சாக்கடை நோண்டப்பட்டு வருகையில் பல்வேறு துர்நாற்றங்கள் அதிலிருந்து கிளம்பி வருகின்றன. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாளி ஸ்ரீனிவாசனின் மருமகனான சி.இ.ஓ. குருநாத் மெய்யப்பனுடன் ஏற்பட்ட சகவாசத்திற்குப் பிறகே விண்டூ தாரா சிங் சிறந்த சூதாட்டக்காரராகவும், அதன் பிறகு நல்ல பணமும் பண்ணியதாக ஆங்கில நாளேட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.