ஐ.பி.எல். கிரிக்கெட் அமைப்பின் தலைவரான லலித் மோடியின் செயல்பாடுகள் மீது மத்திய அரசின் பிடி மேலும் இறுகுகிறது. கடைசியாக கிடைத்த செய்திகளின் படி, மத்திய அரசின் நிறுவன விவகார அமைச்சகம், ஐ.பி.எல். அணி உரிமையாளர்களின் விவரங்கள் அனைத்தையும் திரட்டுமாறு நிறுவனப் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.