கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் படு தோல்வியடைந்த இந்திய அணி சற்றேறக்குறைய நிலைகுலைந்து போயுள்ளது என்று கூறலாம். இந்த நிலையில் நாளை செயின்ட் லூசியாவில் மேற்கிந்திய அணியை 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது.