இலங்கையில் நடைபெறும் இந்திய-இலங்கை ஒரு நாள் தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கருக்கு தவறாக எல்.பி.டபிள்யூ தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறான தீர்ப்புகளினால் சச்சின் டெண்டுல்கர் இந்த தொடரில் 5, 6, 7 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.