“ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டத்தில் போட்டி முடிவுகள் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதன்படியே போட்டிகள் முடிவடைகின்றன” என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளது. ஐ.பி.எல் தலைவர் லலித் மோடியே ஐ.பி.எல் கிரிக்கெட் ஆட்டங்களின் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை முன் கூட்டியே தீர்மானிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.