முதன் முறையாக ஆசியப்போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக சீனாவின் குவாங்சூவில் அருமையான கிரிக்கெட் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கிரிக்கெட் உலகின் தற்போதைய பிரபல அணியான இந்திய அணி இதில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்துள்ளன.