ஹர்பஜன் சிங்கை மீண்டும் இந்திய அணியில் சேர்த்திருப்பது குறித்து பெரிய கேள்விகள் வலம் வரத் தொடங்கியுள்ளன. அதுவும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களை தடவும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஓஜாவை உட்காரவைத்து விட்டு ஹர்பஜனை எடுத்தது ஏன் என்ற கேள்விகள் தற்போது கிளம்பியவண்ணம் உள்ளன.