சென்னை சாந்தி திரையரங்கை விரைவில் இடிக்கப் போகிறார்கள் என்று அறிய நேர்ந்த போது சிறிது வருத்தமேற்பட்டது. எனது அனுபவத்தில் பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு கல்யாண மண்டபங்களாகவும், குடியிருப்புப் பகுதிகளாகவும் மாறியிருக்கின்றன. அப்போதெல்லாம் இல்லாத வருத்தம் சாந்தி திரையரங்கு விஷயத்தில் ஏற்பட்டதற்கு சமீபமாக அத்திரையரங்கில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் பார்த்தது காரணமாக இருக்கலாம். | Shanthi Theatre, Multiflex, Old Films, Old Theatres