1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 30 மார்ச் 2015 (12:24 IST)

சினி பாப்கார்ன் - நடிகர்களின் மனைவிகளுக்கு என்னை கண்டால் பயம்

மாறியது மதம்தான் பெயரில்லை
 
இஸ்லாத்துக்கு மாறிய யுவன் ஷங்கர் ராஜா கீழக்கரையைச் சேர்ந்த ஜெபருன்னிசாவை மூன்றாவதாக திருமணம் செய்தார். மதம் மாறி திருமணம் செய்த கையோடு அவர் பெயரையும் இஸ்லாம் பெயராக மாற்றுகிறார் என்றனர். ஆனால், அப்படியெல்லாம் எந்த ஐடியாவும் இல்லை என யுவன் தெளிவுப்படுத்தினார்.
 
யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரில்தான் சினிமாவில் அறிமுகமானேன். அந்தப் பெயர்தான் ரசிகர்களுக்கு தெரியும். திடீரென்று பெயரை மாற்றினால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார் யுவன். 
 
மதம் மாறினால் பெயரையும் மாற்ற வேண்டும் என்று ஏதாவது சட்டம் உள்ளதா என்ன? யுவன் யுவனாகவே தொடர்வதுதான் நல்லது.

அடிமை விசுவாசிகள்
 
முப்பது சதவீத வரிவிலக்கு வேண்டுமென்றால் யு சான்றிதழுடன் தமிழ் கலாச்சாரத்தை படம் பிரதிபலிக்க வேண்டும் என்று ஒரு வரியை சேர்த்தாலும் சேர்த்தார்கள். அந்த ஒரு வரியை வைத்து இவர்கள் போடும் அழுகுணி ஆட்டம் தாங்கவில்லை.
 

 

 
உதயநிதி திமுக தரப்பு என்பதால் அவர் நடித்த, தயாரித்த எந்தப் படங்களுக்கும் வரி விலக்கு கிடையாது என்ற அடிமை மனோபாவத்தில் உள்ளது, வரிவிலக்குக்கு படங்களை பரிந்துரைக்கும் ஆறு பேர் கொண்ட குழு. அதற்கு இவர்கள் சொல்லும் காரணம் நகைப்புக்குரியது.
 
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு கலாச்சாரத்தை காரணம் காட்டி வரி விலக்கை மறுத்தவர்கள், அதேநேரத்தில் வெளியான 3 படத்துக்கு வரி விலக்கு அளித்தனர். 3 படத்தில் ஹீரோ ஹீரோயினை பாரில் வைத்து திருமணம் செய்து கொள்வான். இது தமிழ் கலாச்சாரமாக தெரிந்தவர்களுக்கு, ஒரு கல் ஒரு கண்ணாடியில் எது தமிழ் விரோதமாக தெரிந்ததோ?
 
இப்போதும், உதயநிதியின் நண்பேன்டா படத்துக்கு வரிச்சலுகை மறுத்துள்ளனர். இந்த அடிமை விசுவாசிகளிடம் குறைந்தபட்ச நாணயத்தைகூட எதிர்பார்க்க முடியாது என்பது தமிழகத்தின் தீராத சாபம்தான்.

சன்னியை பார்த்தால் பயம்
 
நீலப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த சன்னி லியோன் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். என்றாலும் அவருக்கு வருத்தம். ஏன் சல்மான் கான், ஷாருக்கான் போன்றவர்கள் என்னை ஜோடியாக்கவில்லை? ஏன் பாராளுமன்றத்தில் எம்பியாக்கவில்லை? 
 

 

 
என்னை வேண்டுமென்றே சில நடிகர்கள் ஒதுக்குகிறார்கள். என்னுடன் நடிக்கக் கூடாது என்று நடிகர்களின் மனைவிகள் நிபந்தனை போடுகிறார்கள். என்னை கண்டால் அவர்களுக்கு பயம். என்னை ஆபாச நடிகையாகதான் பார்க்கிறார்கள். இது எனக்கு வருத்தமளிக்கிறது என்றிருக்கிறார் சன்னி லியோன்.
 
அரைகுறை கவர்ச்சியல் நடித்தவர்களே வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்பட்டமாக நடித்த சன்னி லியோனுக்கு பாலிவுட் பரிவட்டமே கட்டியிருக்கிறது. நீலப் படத்தில் நடித்தவரை நீலப் படத்தில் நடித்தவர் என்றுதானே சொல்ல முடியும். சுதந்திரப் போராட்ட தியாகி என்றா கொண்டாடுவார்கள்?