வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2016 (11:41 IST)

சினி பாப்கார்ன் - தமிழன் தலை மொளகா அரைப்பதற்கானதா?

சன்னி லியோனா கொக்கா?
 
யானை தலையிலேயே பேன் பார்த்தவர் சன்னி லியோன். அவரையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் பயப்படுத்திவிட முடியமா என்ன?


 
 
சன்னி லியோன் நடித்துள்ள மஸ்திசாதி திரைப்படம் ஜனவரி 29 -ஆம் தேதி வெளியாகிறது. அடல்ட் காமெடி என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் நெடுக விரசம் நிரம்பி வழிகிறது. 2015 டிசம்பர் 23 வெளியான ட்ரெய்லரைப் பார்த்து கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாகாதவர்கள் சொற்பம்.
 
சன்னி லியோன் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை மிலப் ஜவேரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நானும் ஜவேரியும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்மானித்தோம் என்று சன்னி லியோன் கூறியுள்ளார். முன்னாள் நீலப்பட நடிகை என்ன மாதிரியான காட்சிகளை பேசி முடிவெடுத்திருப்பார் என்பது அவரவர் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம்.
 
மஸ்திசாதி ட்ரெய்லர் பார்த்து வரும் எதிர்மறை விமர்சனங்களுக்கு சன்னி லியோன் ரியாக்ட் செய்திருக்கிறார். எப்படி?
 
மஸ்திசாதி படத்துக்காக நான் நடித்திருப்பதில் எந்தத் தவறும் இல்லை. மக்கள் இதுபற்றி என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. என்று இரண்டே வரிகளில் முடித்துக் கொண்டுள்ளார்.
 
ஞானிக்கும், குழந்தைக்கும் அடுத்து கவலையில்லாதவர் சன்னி லியோனாகத்தான் இருப்பார் போலிருக்கிறது.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....

மூசா இஸ் பேக்
 
மம்முட்டி, மோகன்லால் படங்கள் ஹிட் கொடுக்க தவறிய போதும், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தாமல் ஓடியவை திலீப் நடித்த படங்கள். சென்ற வருட இறுதியில் அவர் நடிப்பில் வெளியான 2 ஸ்டேட்ஸ் திரைப்படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் காரணம் திலீபின் நகைச்சுவை.


 
 
2003 -இல் திலீப் முதல்முறையாக சிஐடி மூசா என்ற படத்தை தயாரித்து நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் பிரசன்னா நடிப்பில் சீனாதானா 001 என்ற பெயரில் ரீமேக் செய்தனர். கன்னடம், தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. பாவனா நாயகியாக நடித்திருந்தார்.
 
அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் கேட்டபடி உள்ளனர். அதற்கு இந்த வருடம் பதிலளித்துள்ளார் திலீப். இரண்டாம் பாகம் கண்டிப்பாக எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அனேகமாக இந்த வருடமே இரண்டாம் பாகம் திரைக்கு வரலாம். இரண்டாம் பாகத்துக்கு சிஐடி மூசா ப்ரம் ஸ்காட்லாண்ட் என பெயர் வைத்துள்ளனர்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....

தமிழன் தலை மொளகா அரைப்பதற்கானதா?
 
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார் அஜித். அவரை எப்படியும் அரசியல் களத்தில் இழுத்துவிடுவது என ஒரு கும்பல் கொலவெறியோடு திரிகிறது.


 
 
தனது மன்றங்களைச் சேர்ந்தவர்கள் கட்சி அடிப்படையில் வேலை செய்வதை அறிந்த அடுத்தகணம் மன்றங்களையே கலைத்தார். அந்தளவு விழிப்புணர்வு கொண்ட அஜித்தையே தமிழன் தலையில் மொளகா அரைக்க பயன்படுத்தலாம் என சிலர் நினைப்பதுதான் வேடிக்கை.
 
வெளிப்படையாக தனது அரசியல் சார்பு எது என அஜித் அறிவித்ததில்லை என்றாலும், அவர் ஒரு அதிமுக அனுதாபி என்பது அனைவருக்குமே தெரியும். அவரை அரசியலில் இழுத்துவிட நினைப்பவர்கள் பிஜேபியினர். தங்கள் கட்சியில் எப்படியும் அஜித்தை இழுத்துவிடுவது என கங்கணம்கட்டி இறங்கியிருக்கிறார்கள். எம்ஜிஆர் மலையாளி என்றால், அஜித் பாதி மலையாளி, அவரது ஜாதகப்படி எம்ஜிஆரைவிட பெரிய இடத்தை அரசியலில் பிடிப்பார் என சில வேலைவெட்டி இல்லாத ஜோதிடர்கள் மூலமாக பிரைன்வாஷ் ஆபரேஷன் ஒன்று சைலண்டாக நடந்து வருகிறது.
 
எறும்பு ஊர கல்லும் தேயும், அஜித் எம்மாத்திரம் என்ற வேலைத்திட்டத்தோடு இவர்கள் செயலில் இறங்கியிருக்கிறார்கள். அரசியல் ஞானம் இல்லாதவர்கள் எல்லாம் பதவிக்குவர, தமிழன் தலை என்ன மொளகா அரைக்கும் எந்திரமா?
 
இந்த ஜோதிட நரிகளுக்கு நாம்தான் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.