காப்பி சர்ச்சையில் ஐஸ்வர்யாவின் வை ராஜா வை


ஜே.பி.ஆர்| Last Updated: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (10:33 IST)
தமிழில் தயாராகும் படங்களில் எண்பது சதவீதம் பிற படங்களின் பாதிப்பில் எடுக்கப்படுபவை. சில அப்பட்ட காப்பிகள், சில புத்திசாலித்தனமான தழுவல்கள்.
 
காப்பி குறித்து எழுதி நமக்கே போரடித்துவிட்டதால், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கும், ஹாலிவுட், ப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் படத்துக்குமான பத்து பொருத்தங்களை நாம் பட்டியலிடவில்லை. மேலும், மணிரத்னத்தின் ஆத்மார்த்த குரு பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்களிலும் ஓ காதல் கண்மணியின் சாயலை காணலாம்.
 
 
நிற்க. விஷயம் ஓ காதல் கண்மணி பற்றியதல்ல. ஐஸ்வர்யாவின் இரண்டாவது படம், வை ராஜா வை ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. 2008 -இல் ஹாலிவுட்டில் 21 என்ற படம் வெளியானது. படத்தின் நாயகன் ஒரு ஸ்டூடண்ட். ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் படித்து டாக்டராக வேண்டும் என்பது அவனது கனவு. அதற்கு நிறைய டப்பு வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :