வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Caston
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2016 (17:47 IST)

கமல்ஹாசன் வாழ்க்கையில் கடந்து போகும் பெண்கள்!

கமல்ஹாசன் வாழ்க்கையில் கடந்து போகும் பெண்கள்!

உலகநாயகன் என வர்ணிக்கப்படும் மிகப்பெரும் கலைஞனான கமல்ஹாசனின் வாழ்க்கையில் பல பெண்கள் கடந்து சென்றுள்ளனர். சமீபத்தில் 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கௌதமி கமலை பிரிவதாக அறிவித்தார். இது தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.


 
 
கமல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவரை மையமாக வைத்து பல பெண்களுடன் கிசுகிசுக்கப்படும். பல பெண்களுடன் கமல் நெருக்கமாக இருந்தார் என சொல்லப்பட்டாலும் அவர் அதிகாரப்பூர்வமாக மூன்று பெண்களுடன் தான் வாழ்ந்துள்ளார்.
 
வாணி கணபதியுடன் கமல்:
 
பரதநாட்டிய கலைஞரான வாணி கணபதியை 1978-ஆம் ஆண்டு கமல் திருமணம் செய்தார். வீட்டில் பார்த்து கட்டி வைக்கப்பட்ட வாணி கணபதியுடன் கமல் 10 ஆண்டுகள் வாழ்ந்தார். நடிகை சரிகா கமலின் வாழ்க்கையில் வந்ததும் வாணி கணபதியை விவாகரத்து செய்தார் கமல். இந்த விவாகரத்தின் போது வாணி கணபதிக்கு பெரும் தொகையை ஜீவனாம்சமாக கமல் கொடுத்ததாக கூறப்பட்டது. இதற்கு வாணி கணபதி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
 
சரிகாவுடன் கமல்:
 
வாணி கணபதியை விவாகரத்து செய்த கமல் இந்தி நடிகை சரிகாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். இருவரும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். பின்னர் திருமணம் செய்து கொண்ட கமல் அதற்கு கூறிய காரணம் ஹோட்டலில் ரூம் புக் பண்ண திருமணம் ஆகவில்லை என்றால் கெடுபுடிகள் அதிகமாக இருக்கிறது அதற்காக தான் திருமணம் செய்துகொண்டதாக கூறினார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸுருதி, அக்‌ஷரா. 1988-இல் சரிகாவை திருமணம் செய்த கமல் 2002-இல் அவரை விட்டு பிரிந்தார். 17 வருட இவர்கள் உறவு முறிவுக்கு வந்தது.
 
கௌதமியுடன் கமல்:
 
சரிகாவை பிரிந்த கமல் பின்னர் கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்த ஜோடி 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தது. வரும் 7-ஆம் தேதி கமலுக்கு பிறந்த நாள் வருவதையொட்டி அவருக்கு பிறந்த நாள் பரிசாக கௌதமி பிரிந்து செல்லும் செய்தியை அறிவித்துள்ளார்.
 
இந்த கால கட்டங்களில் கமலுடன் பல்வேறு பெண்களை சேர்த்து கிசுகிசுக்கப்பட்டது. தற்போது கௌதமி பிரிவிற்கும் காரணம் கமலுடன் ஒரு பெண்ணை சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கமலும், பெண்களும், கிசுகிசுவும், சர்ச்சையும் என்றுமே பிரிக்க முடியாது போலிருக்கிறதே.