1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை இருப்பது ஏன்...?

சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை இருக்கும். அந்த சிலை சிவனை நோக்கி இருக்கும். நந்தியின் நான்கு கால்களும் நான்கு வகையான குணத்தை வெளிப்படுத்துவதாக ஐதீகம். அதாவது, சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் ஆகிய நான்கு.  

சிவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.
 
நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
 
பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். நந்தி வழிபாடு நற்கதியளிக்கும் என்பார்கள். 
 
சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. நந்தி (காளை) என்பவர் இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் கயிலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார்.