1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனி மஹாபிரதோஷ வழிபாட்டின் பலன்கள் என்ன...?

''தோஷம்'' என்றால் குற்றமுடையது என்பது பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால்  நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும். பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் மேலோங்கி கர்ம வினைகள் ஒழியும்.
 
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும்  பலன்கள் கிடைக்கும்.
 
பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது. பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
 
பிரதோஷ தினத்தில் இறைவனுக்கு  நம்மால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பது சிறப்பு. ஆலயம் செல்ல முடியாதோர் வீட்டிலிருந்து எளிய பூஜை முறைகள் செய்து தயிர் சாதம், பழவகைகளை  நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு.
 
பிரதோஷம் சனிக்கிழமை நாட்களில் வந்தால் அது அது சனிப்பிரதோஷம் என்றும் மகா பிரதோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை பிரதோஷ நாள், சிவபெருமானை தரிசித்து வந்தால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும். இன்று நீங்கள் செய்யும் தானத்தல் இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். மேலும் இந்நாளில் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்கி வந்தால் சனி பகவானால் ஏற்பட்ட தோஷம் தீரும்.
 
சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் சிவ ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகமாகும் நோய்கள் நீங்கும் நீண்ட  ஆயுள் கிடைக்கும்.