லட்சுமி நரசிம்ம ஹோமம் செய்வதால் என்ன பலன்கள்....?

வெள்ளிக்கிழமைகள் அல்லது உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற தினங்களில் இந்த லட்சுமி நரசிம்ம ஹோமம் செய்தால் பலன்கள் வேகமாகவும், அதிகமாகவும் கிடைக்கும்.
இந்த லசட்சுமி நரசிம்ம ஹோமம் செய்யும் போது லட்சுமி நரசிம்மருக்கு தாமரை பூக்கள் சமர்ப்பித்து, வெல்லம் கொண்டு செய்யப்படும்  பானகம் நைவேத்தியமாக வைக்கவேண்டும். ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டிக் கொள்வதும்  நம்முடைய தோஷங்களை போக்குகிறது. பிரசாதமான பானத்தை ஹோமம் பூஜை செய்தவர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அருந்த  வேண்டும்.
 
லட்சுமி நரசிம்ம ஹோமத்தை செய்து கொள்வதால் தம்பதிகள் மற்றும் பிற உறவினர்களுடன் ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாடுகள் நீங்கி  ஒற்றுமை உண்டாகும். காரியங்களில் தடை, தாமதங்கள் இல்லாமல் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளை பெற முடியும். சொந்த வீடு, வாகனம் மற்றும் மிகுதியான செல்வச் சேர்க்கை போன்ற பாக்கியங்களை தரும். 
 
வசிக்கின்ற வீடுகளில் ஏற்பட்டிருந்த துஷ்ட சக்தி பாதிப்புகள், மாந்திரிக ஏவல்கள் போன்றவற்றின் தீய அதிர்வுகள் முற்றிலும் நீங்கி நன்மையான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத  கடன் பிரச்சனையும் விரைவில் தீருவதற்கான வழிகள் கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :