திருமகளான மகாலட்சுமியின் செல்வத்தை பராமரிக்கும் குபேரன்

திருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.
* வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை  செய்ய வேண்டும்.
 
* திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
 
* குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று.
 
* குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.
 
* குபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.
 
* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.

* வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
 
* குபேர மந்திரம்: ஓம் ஹ்ரீம் க்ளீம்சௌம் ஸ்ரீம் கும் குபேராய நரவாகனாயயக்ஷ ராஜாய…தன தான்யாதிபதியே…லக்ஷ்மி புத்ராய…ஸ்ரீம்…ஓம்…குபேராய நமஹ….!


இதில் மேலும் படிக்கவும் :