வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (16:54 IST)

மிதுனம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

கலகலப்பானவர்களே! உங்களுடைய ராசியை ராசிநாதன் புதனும், சேவகாதிபதி சூரியனும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும்.

உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். அவ்வப்போது உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிறு வலிக்கும். மனைவியுடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும்.
 
உங்கள் ராசிக்கு தைரிய வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதையும் உணருவீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூலாகி வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.
 
இரத்த அழுத்தம், நீரிழிவு நோயெல்லாம் கட்டுப்பாட்டிற்குள் வரும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் விலகும். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை திருப்பித் தருவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள்.
 
07.01.2016 வரை ராகு 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு மூட்டு வலி, காலில் நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும். அத்தை, அம்மான் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சகோதர வகையில் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிப்பொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்வது நல்லது.
 
07.01.2016 வரை கேது 10-ம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிர்ப்பு, சின்ன சின்ன அவமானம், உத்யோகத்தில் வேலைச்சுமை, ஒருவித படபடப்பு, ஒற்றை தலை வலி வந்துப் போகும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உங்கள் மீது சிலர் பழி சுமத்த முயல்வார்கள்.
 
08.01.2016 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள். ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு நுழைவதால் மனோபலம் கூடும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் சிலர் வீடு வாங்குவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாக திரும்பும். ஷேர் மூலம் பணம் வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
 
தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். புதிதாக கடன் வாங்கி அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஆனால் 9-ம் வீட்டில் கேது அமர்வதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.
 
கனவுத் தொல்லையால் தூக்கம் குறைந்ததே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தந்தையாரின் உடல் நலம் பாதிக்கும். அவரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடை, தாமதம் ஏற்படும். பழைய வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிகப் பெரியோர்கள், சாதுக்கள் உதவுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொள்ளக் கூடிய சக்தி கிடைக்கும். முன்னேற்றம் உண்டு. மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
 
அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கூடாபழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவார்கள். வீடு கட்ட வாங்க, சொந்தமாக தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவர்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
 
நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். உங்களுக்குள்ளேயே ஒருசில உறுதி மொழிகளை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் உண்டு.
 
இந்த 2016-ம் ஆண்டு முழுக்க குருபகவான் சாதகமாக இல்லாததால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். வெளியில் தைரியசாலியாக உங்களைக் காட்டிக் கொண்டாலும், உள்மனதில் ஒருவித பயம் பரவும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசி முடிவெடுக்கப்பாருங்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.
 
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். சிம சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். மன அழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர்களுடன் உங்களை ஓப்பிட்டுப் பார்க்க வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். சிலர் உங்களை பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். வீட்டில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.
 
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிக்க தவறாதீர்கள். அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்ளும் அறிவாற்றலைப் பெறுவீர்கள். வேலையாட்களால் விரயம் வரும்.
 
புது ஏஜென்சி யோசித்து எடுங்கள். நண்பர்களின் உதவியால் சிலர் கடையை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவிர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் வகைகளால் ஓரளவு லாபம் வரும். செப்டம்பர், நவம்பர் மாதங்களில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
 
உங்களின் உத்யோக ஸ்தானாதிபதியான குருபகவான் இந்தாண்டு முழுக்க சாதகமாக இல்லாததால் உத்யோகத்தில் ஒரு ஸ்திரமற்ற போக்கு நிலவும். மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள்.
 
குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். இழந்த சலுகைகளைப் போராடிப் பெறுவீர்கள். உங்களுடைய படிப்பிற்கும், அனுபவத்திற்கும் தகுந்த வேலைக் கிடைக்க வில்லையே என சில நேரம் அஞ்சுவீர்கள். நிபந்தனையின் பேரில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
 
கன்னிப் பெண்களே! இன்டெர்நெட்டில் அதிக நேரம் அமர வேண்டாம். இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்காதீர்கள். காதல் விவகாரங்களில் தள்ளியிருங்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். திருமணம் தாமதமாகி முடியும். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். புதிய நண்பர்களை நம்பி பழைய நட்பை இழக்காதீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் குறையும். சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறையுங்கள். விளையாடுங்கள் ஆனால் கிரிக்கெட் போன்ற கடினமான பந்துகளைக் கொண்ட விளையாட்டுகளை தவிர்ப்பது நல்லது. மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.
 
அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை தகுந்த ஆதாரமில்லாமல் தாக்கிப் பேச வேண்டாம். சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் நிலத்தாரை அனுசரித்துப் போங்கள். மரப்பயிர் லாபம் தரும்.
 
இந்த 2016ம் ஆண்டு உங்களுக்கு வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுத் தருவதுடன், சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் புரிய வைப்பதாக அமையும்.
 
பரிகாரம்:
 
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஏகாம்பர நாதேஸ்வரரை தும்பைப் பூ மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள்.