வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நெற்றியில் குங்குமம் வைப்பதால் தீய சக்திகள் விலகுமா...?

புருவத்தின் நடுவில் குங்குமம் வைத்தால் எவ்வித தீய மற்றும் வசியம் செய்தாலும் எதுவும் நடைபெறாது. நெற்றியில் குங்குமம் வைத்தால்  தீய சக்திகள் விலகும்.
குங்குமத்தை மஞ்சள், சுண்ணாம்பு, படிகாரம் போன்றவற்றால் செய்வதனால் கிருமி நாசியினியாக செயல் புரியும். இதனை மைய பகுதியில்  வைப்பதால் மூளைக்கு செல்லும் நரம்புகளின் வெப்பத்தை தணிக்கும் தன்மை கொண்டது.
 
சூரிய ஒளி குங்கமத்தின் மீது படும் பொழுது அதில் உள்ள மூலிகை தன்மையானது வெளிப்படும். வைட்டமின் டி சத்தும் உடலுக்கு சென்று நன்மைகள் ஏற்படுத்துகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தால் மகாலட்சுமி மகிழ்ந்து வரம் அருள்வாள்.
 
நெற்றியில் மஞ்சள் வைப்பதால் நோய்க்கிருமிகளை விரட்டுகிறது. மஞ்சள் வைக்கும் பொழுது அதன் மேல் படும் கற்று நம் முகத்தை சுற்றி தான் இருக்கும். மஞ்சள் துர் கிருமிகளை அண்டவிடாது. நாம் சுவாசிக்கும் பொழுதும் நோய்க்கிருமிகள் இல்லாத சுத்தமான காற்றை சுவாசிக்க  உதவி புரியும். நெற்றியில் மஞ்சள் வைத்து கொள்வதால் மருத்துவ குணங்கள் கிடைப்பதால், இதனை அதிகம் பயன்படுத்தலாம். முகத்தில்  மஞ்சள் அடிக்கடி பயன்படுத்தினால் கிருமிகளை அண்டவிடாது.