கனிவான விசாரிப்பால் மற்றவர்களையும் கவர்ந்திழுக்கும் நீங்கள், உள்ளன்று வைத்து புறமொன்று பேச மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திர பதிவு செய்வீர்கள்.