த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : மீனம்

Webdunia|
FILE
தங்கத்தின் தரம் கூட குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள் தான். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்துப் போவதில் உங்களுக்கு உடன்பாடில்லை. ஏக்கர் கணக்கில் சொத்து சேர்ந்தாலும் ஆறடி நிலம் கூட சொந்தமாவப்போவதில்லை என்ற பிரம்ம சூத்திரத்தை அறிந்திருப்பீர்கள். அதனால்தான் கிடைத்த சந்தப்பத்தை பயன்படுத்தி எல்லோருக்கும் இருப்பதைக் கொடுப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு பத்தாவது ராசியில் இந்த நந்தன வருடம் தொடங்குவதால் உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்‌கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். என்றாலும் ஆடி மாதத்தில் பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.
மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்குவீர்கள். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். உயர்கல்வியில் ஆர்வம் காட்டுவார். ஆவணி மாதத்தில் அரசுக் காரியங்கள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.
வரவேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கி இருந்த கடனை தந்து முடிப்பீர்கள். தலை சுற்றல், வயிற்றுவலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பிரார்த்தனைகளை முடிக்க நேரம் கிடைக்கும். 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 6-ம் வீட்டில் நீடிப்பதால் பழைய பிரச்னைகளுக்கு உங்களின் மாறுபட்ட அணுகுமுறையாலும், விட்டுக் கொடுத்து போகும் போக்காலும் உடனடி தீர்வு கிட்டும். எதிர்த்தவர்கள் மனம் திருந்தி வலிய வந்து பேசுவார்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
17.5.2012 முதல் குருபகவான் ராசிக்கு 3-ல் அமர்வதால் சில விஷயங்கள் இரண்டாவது முயற்சியில் முடியும். மூச்சுத் திணறல், தூக்கமின்மை வந்துப் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு செலவினங்கள் அதிகரிக்கும். பழைய நண்பர்கள், உறவினர்களிடத்தில் பகைமை வரக் கூடும். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும்.
அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். யாரிடம் எப்படிப் பேசுவது, நடந்து கொள்வது என்ற அனுபவ அறிவு கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த ஊர் விசேஷங்களுக்கு கை காசைப் போட்டு செலவு செய்வதுடன், தலைமையும் தாங்குவீர்கள். தட்டில் சாப்பாடு இருந்தும் நிம்மதியாக சாப்பிடமுடியாதபடி தினந்தோறும் ஒரு பிரச்சனையை சந்தித்தீர்களே! இனி நிம்மதியாக சாப்பிடுவீர்கள். இளைய சகோதரியின் திருமணத்தை ஆடம்பரமாக ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள்.
13.4.2012 முதல் 11.9.2012 வரை 7-ல் சனி தொடர்வதால் முன்கோபம், டென்ஷன், வீண் கவலைகள் வந்துப் போகும். மனைவியின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மனைவிவழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். இனி எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். சகோதர வகையில் அதிக உரிமையெடுத்துக் கொள்ளவேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும். லேசாக கால் வலி, உடல் அசதி, தோலில் நமைச்சல் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.
12.9.2012 முதல் அஷ்டமத்துச்சனியாக வருவதால் எதிலும் பயம், போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்விமனப்பான்மை, வீண்பழி வந்துப் போகும். பணப்பற்றாக்குறை, கணவன்-மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தரவும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் வரும். சில சமயங்களில் பெரிய நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியும். என்றாலும் பதட்டம் வேண்டாம்.


இதில் மேலும் படிக்கவும் :