வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. புனிதப் பயணம்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

பழம்பெரும் சித்தநாத் மஹாதேவ் கோயில்!

webdunia photoWD
இந்த வார புனிதப் பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நர்மதை நதி பாய்ந்தோடும் ஹேமாவர் நகரத்தில் உள்ள புனித சிவ தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

இந்த கோயில் சித்தநாத் மஹாதேவ கோயில் என்று பலராலும் அறியப்படுகிறது.

சனந்த், சனக், சனாதன், சனத் குமார் என்ற நான்கு சித்த ரிஷிகளால் இந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இந்த கோயிலுக்கு சித்தநாத் கோயில் என்று பெயர் வந்தது.

இந்த கோயில் கி.மு. 3094ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக இதன் வரலாறு கூறுகிறது. அப்போது இந்த கோயில் கிழக்கு திசை நோக்கி இருந்ததாகவும், பின்னர் பாண்டவர் ஆட்சியின் போது பீமா, இந்தக் கோயிலின் வாயிற்புறத்தை மேற்கு நோக்கித் திருப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

webdunia photoWD
ஒவ்வொரு நாளும் காலை வேளையில் இந்த நதிக்கரையோரத்தில் பன்றிகளின் காலடித் தடங்கள் இருக்கின்றன. இவைகள் சனகதிக் ரிஷிகளின் காலடித் தடங்கள் என்று அங்கிருப்பவர்கள் நம்புகின்றனர். மேலும், தோல் நோய் இருப்பவர்கள் இந்த மண்ணில் அங்கப்பிரதஷ்ணம் செய்வதன் மூலம் தங்களது நோய் குணமாகும் என்றும் நம்புகின்றனர்.

மேலும், அப்பகுதிக்கு அருகே உள்ள குன்றுகளில் பல துறவிகள் வாழ்வதாகவும், அவர்கள் காலை வேளையில் இங்கு வந்து நர்மதையில் நீராடிச் செல்வதாகவும் அ‌ப்பகு‌தி‌யி‌லவா‌ழ்பவ‌ர்க‌ளகூறுகின்றனர்.

webdunia photoWD

இந்த கோயிலைச் சுற்றி இருக்கும் சுவர்களில் இந்து மற்றும் ஜைன மதங்களைப் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் படித்தவ‌ர் நிச்சயம் மோட்சத்தை அடைவா‌ர் என்ற நம்பிக்கையும் பரவலாஉள்ளது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களிலும், சங்கராந்தி, சிவராத்திரி நாட்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நர்மதையில் புனித நீராடிவிட்டு கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்கின்றனர்.

கடந்த 10 மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளில் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை ஒட்டியுள்ள சுவர்களில் அழகான சிற்பங்களும் உள்ளன. கோயிலுக்குள் உள்ள தூண்களிலும், சுவர்களிலும் சிவன், பைரவ், கணேஷ், சாமுண்டா, இந்திரா மற்றும் பல்வேறு வகையான இறை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

எல்லா நாட்களிலும் மிகவும் ரம்மியமாகக் காட்சி அளிக்கும் இய‌‌ற்கசூழ‌லி‌னபின்னணியி‌‌ல் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு வருவோரது காதுகளில் நர்மதை நதி ஆர்ப்பரிக்கும் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்.

எப்படிச் செல்வது :

சாலை மார்கம் : இந்தூரில் இருந்து 130 கிலோ மீட்டரிலும், போபாலில் இருந்து 170 கிலோ மீட்டரிலும் அமைந்துள்ளது ஹேமாவர்.

ரயில் மார்கம் : டெல்லி - மும்பை செல்லும் வழியில் ஹர்தா ரயில் நிலையத்தில் இறங்கி 15 கி.மீ. கோயிலை அடையலாம்.