தகத் சச்கண்ட் ஸ்ரீ ஹசூர் அப்சல்நகர் சாஹிப்

-ஹர்தீப் கெளர்

webdunia photoWD
இரண்டு அடுக்கு மாடி கொண்ட இந்த தலத்தின் உள்பகுதி, அமிர்தசரஸில் உள்ள ஹர்மிந்தர் சாஹிப் தலத்தின் அமைப்பு போன்று உள்ளது. உள் அறைகள் அனைத்தும் தங்க தகடுகளால் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த தலத்தின் உட்பகுதியில்தான் குரு கிரந்த் சாஹிப் பகல் பொழுதுகளில் அமர்ந்திருப்பார். இரவு நேரத்தில் உள் அறையில் இருக்கும் மார்பல் தரையில் படுத்திருப்பார். பகல் நேரத்தில் பழைய ஆயுதங்கள் சிலவற்றை அவர் தன்னுடன் வைத்திருப்பார். அவைகள் தற்போதும் அந்த மார்பல் தரையில் வைக்கப்பட்டுள்ளது.

குருத்வாரா சச்கண்ட் சாஹிப் அருகில் மேலும் பல குருத்வாராக்கள் உள்ளன. நஜினா காட், கண்டா காட், சங்கத் சாஹிப், பவோலி சாஹிப், மால் தேக்டி, ஷிகார் காட், ஹிரா காட் மற்றும் மாதா சாஹிப் கெளர் ஆகியவையும் உள்ளன.

எப்படி செல்வது?

webdunia photoWD
சாலை மார்கம் : பெரும் நகரங்களில் இருந்து நாண்டட் இணைக்கப்பட்டுள்ளது. ஒளரங்காபாத்தில் இருந்து 300 கி.மீ. தொலைவில் நாண்டட் உள்ளது.

விமான மார்கம் : சச்கண்ட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் நாண்டட் விமான நிலையம் உள்ளது.

ரயில் மார்கம் : பெரிய நகரங்களில் இருந்து ரயில்கள் நாண்டட்டிற்கு செல்கின்றன. குறிப்பாக அமிருதசரசில் இருந்து சிறப்பு ரயில் நாண்டட் செல்கிறது.Webdunia|
இந்த வாரப் புனிதப் பயணத்தில், சீக்கியர்களின்முக்கியமான ஐந்து புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் நாண்டட்டில் உள்ள தகத் சச்கண்ட் ஸ்ரீ ஹசூர் அப்சல்நகர் சாஹிப் தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம்.
இந்த தலம் இந்திய மக்கள் மட்டும் அறிந்த ஒன்றல்ல, உலகம் முழுவதிலும் வாழும் சீக்கிய மக்களால் அறியப்பட்ட தலமாகும்.சீக்கியர்களின் 10வது மற்றும் கடைசி குருவான குரு கோபிந்த் சிங் அமைத்த தலம் தான் இது. இங்கு தான் அவர் சமாதியடைந்தார்.நாண்டட்டில் குரு கோபிந்த் சிங் உயிர் பிரிந்ததும், அவரது உயிர், அவரது குதிரை தில்பாக்குடன் சுவர்கம் அடைந்தது என்று சீக்கியர்கள் நம்புகின்றனர்.குருத்வாரா முழுவதும் அழகிய வேலைப்பாடுகளும், ஓவியங்களும் அமைந்துள்ளது. குரு கோபிந்த் சிங்கின் கடைசி மூச்சு பிரிந்த இடத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் அமைத்ததுதான் குருத்வாரா.இந்த இடம்தான் தகத் சச்கண்ட் ஸ்ரீ ஹசூர் அப்சல்நகர் சாஹிப் என்று பெயர்மாற்றம் கொண்டது. ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இத்தலத்திற்கு வந்து செல்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :