ஏக்வீரா தேவி கோயில்

-விகாஸ் ஷிர்புர்கர்

webdunia photoWD
இந்த கோயிலுக்கு வருவதென்றால் காலை நேரத்தில் வர வேண்டும். அந்த நேரத்தில் சூரிய உதயமும், நதியின் நீரோட்டமும், அம்மனின் அருளும் நமது கண்களுக்கு விருந்து படைக்கின்றன.

இந்த கோயிலில் கணேசன் மற்றும் துர்கை அம்மனின் திருவுருவச் சிலைகளும் அமைந்துள்ளன. கோயிலின் நுழைவாயில் யானைகளின் சிலைகளுடன் நம்மை வரவேற்கிறது.

மேலும், மகாலட்சுமி, வித்தால்-ருக்மணி, சீதலாமாதா, அனுமன், பைரவர், பரசுராமருக்கும் சன்னதிகள் உள்ளன.

webdunia photoWD
நவராத்திரி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். இங்கு வந்து அம்மனை தரிசித்தால் தங்களது பிரச்சினைகள் தீரும், விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்புகின்றன

எப்படி செல்வது?

சாலை மார்கமாக செல்வதென்றால், மும்பை - ஆக்ரா மற்றும் நாக்புர் - சூரத் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக துலியாவிற்கு செல்லலாம். மும்பையில் இருந்து 425 கி.மீ. தொலைவில் துலியா நகரம் அமைந்துள்ளது.

webdunia photoWD
ரயில் மார்கமாக செல்வதற்கு, மும்பையில் இருந்து சாலிஸ்கான் சென்று அங்கிருந்து துலியாவிற்கு ரயிலில் செல்லலாம்.

விமானத்தில் செல்ல, நாசிக் (187 கி.மீ.) மற்றும் ஹெளரங்காபாத் (225 கி.மீ.) விமான நிலையங்கள் அமைந்துள்ளன.
Webdunia|
இந்த வாரப் புனிதப் பயணத்தில், மகாராஷ்டிர மாநிலம் துலியா நகரத்தில் பஞ்ஹார் நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிமாயா ஏக்வீரா தேவியின் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
மகாராஷ்டிராவில் இருந்து மட்டும் அல்லாமல், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏக்வீரா தேவியின் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.இந்த ஆதிஷக்தி ஏக்வீரா தேவி இறைவன் பரசுராமரின் தாய். இந்த ஆதிஷக்தி ஏக்வீரா தேவி பல அவதாரங்கள் எடுத்து அரக்கர்களை வதம் செய்துள்ளாள்.


இதில் மேலும் படிக்கவும் :