மகாராஷ்டிராவின் பிரதிகாசி

- விகாஸ் ஷிர்புர்கர்

webdunia photoWD
இதையடுத்தே இந்த முக்கூடல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே இரவில் பல சிவ பக்தர்கள் சேர்ந்து 107 கோயில்களை அமைத்தனர். கடைசியாக 108வது கோயில் கட்டும்போது பொழுது புலர்ந்ததாகவும், அப்போது அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், இப்பகுதிக்கு காசி என்று பெயரிட்டார். இங்கு தோன்றிய சிவன், காசிவிஷ்வேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

இங்குள்ள கோயிலில்தான் காஷிவிஷ்வேஸ்வரர் மற்றும் கேதாரேஸ்வரர் என இருவரும் காட்சி அளிக்கின்றனர்.

கேதாரேஷ்வரர் கோயிலின் முன்பு, இறந்தவர்களின் அஸ்தியை கரைக்கும் இடம் உள்ளது.

எப்படிச் செல்வது?

சாலை மார்கம் - நந்துர்புரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது. நாசிக், மும்பை, புனே, சூரத், இந்தூர் பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உண்டு.

ரயில் மார்கம் - சூரத், புசவால் ரயில் மார்கத்தில் நந்துர்புர் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.

விமான மார்கம் - நந்துர்புர் அருகில் இருக்கும் விமான நிலையம் சூரத் விமான நிலையமாகும். இங்கிருந்து 150 கி.மீ. தொலைவில் நந்துர்புர் அமைந்துள்ளது.

புகை‌ப்பட‌த் தொகு‌ப்பு!
Webdunia|
இந்துக்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது காசிக்கு போய் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அவ்வாறு காசிக்குப் போய் வர முடியாதவர்களின் அஸ்தியாவது காசியில் ஓடும் கங்கை நதியில் கரைப்பது வழக்கம்.
இப்படி பல்வேறு சிறப்புகள் மிக்க காசியை விட பல மடங்கு சிறப்புப் பெற்ற தலத்தைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.இந்த வார புனிதப் பயணத்தில் நாம் போகும் பிரதிகாசி கோயிலுக்கு ஒரு முறை சென்றுவந்தால் காசிக்கு நூறு முறை சென்று வந்ததன் பலன் கிட்டும் என்பது பழமொழி.மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நந்துர்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குஜராத் மற்றும் மத்தியப்பிரதேச எல்லையில் இந்த கோயில் அமைந்துள்ளது. தபதி, புலான்டா மற்றும் கோமாய் நதிகளில் முக்கூடல் பகுதிதான் கோயிலின் அமைவிடம். இப்பகுதியில் சுமார் 108 கோயில்கள் அமைந்துள்ளன.உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரதிகாக்கு ஒவ்வொரு நாளும் வந்த வண்ணம் உள்ளனர்.இந்துக்களின் புராணத்தில், அப்போது ஆறு மாதம் முழுவதும் இரவாகவும், ஆறு மாதம் பகலாகவும் இருந்த காலமாம். சிவ பக்தர் ஒருவரது கனவில் தோன்றிய சிவபெருமான், ஒரு இரவிலேயே தனக்கு 108 ஆலயங்கள் கட்ட வேண்டும் என்றும், அவ்விடத்தில் தான் குடிகொள்வேன் என்றும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :