அரண்முலாவின் பார்த்தசாரதி கோயில்

-டி. பிரதாபசந்திரன்

webdunia photoWD
இந்த கோயில் கேரள மாநிலத்தின் பாரம்பரிய கட்டடக் கலையின் படி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூலவர் ஸ்ரீபார்த்தசாரதி ஆறு அடி உயரத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் வீற்றிருக்கின்றன.

Webdunia|
கேரளாவில் இருக்கும் பழம்பெரும் கோயில்களில் அரண்முலாவில் உள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலும் ஒன்று. கோயிலின் மூல தெய்வம் பார்த்தசாரதி. இந்த கோயில் புனித நதியான பம்பையின் கரையோரத்தில், பத்தினம்திட்டா மாவட்டம் அரண்முலாவில் அமைந்துள்ளது.
இந்த கோயில் பாண்டவர்களில் ஒருவராக அர்ஜூனன் கட்டியதாக நம்பப்படுகிறது.போரில் ஆயுதமில்லாமல் நின்ற கர்ணனைக் கொன்றதன் பாவத்தை போக்க அர்ஜூனனால் இந்த கோயில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.இந்த கோயில் பற்றி மற்றொரு கருத்தும் நிலவுகிறது. அதாவது, இந்த கோயில் முதலில் சபரிமலை அருகே உள்ள நிலக்கல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டதாகவும், பின்னர் 6 மூங்கில்களைக் கொண்டு செய்யப்பட்ட மிதவையின் மூலம் இங்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. மேலும், அதனாலேயே இப்பகுதிக்கு அரண்முலா (ஆறு மூங்கில் கொம்புகள்) என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி கொண்டு செல்லப்பட்டு சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுவது வழக்கம். மேலும், ஓணம் திருவிழாவின் போது நடைபெறும் அரண்முலா படகுப் போட்டியும் எல்லோரும் அறிந்த திருவிழாவாகும்.


இதில் மேலும் படிக்கவும் :