‘ஏன் என்னோடு பேசுவதில்லை’ என்று கைபேசியில் அழைத்த காதலி அன்புடன் கோபிக்கிறாள். பிரச்சனையைக் கூற விருப்பமற்றவனாய் மழுப்புகிறான். அம்மா, தங்கைக்கு ஏமாற்றத்தை தர விரும்பவில்லை. தான் பணியாற்றிய நிறுவனத்தில் கடைசி பணி நாள். அன்று நீண்ட நாள் இருந்து, இரவையும் கழித்துவிட்டு, கனத்த இதயத்துடன் வீட்டை நோக்கி தனது வாகனத்தை செலுத்துகிறான் கெளதம்.