‌சிறு‌மி ‌அடி‌த்து ‌சி‌த்ரவதை

Webdunia| Last Modified செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:26 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் எடாவா எ‌ன்ற பகு‌தி‌யி‌ல் வா‌ழ்‌ந்து வரு‌ம் கோமள் என்ற 6 வயது தலித் சிறு‌மியை காவ‌ல்துறை‌யின‌ர் அடி‌த்து ‌சி‌த்‌திரவதை செ‌ய்து‌ள்ளன‌ர்.

ஜ‌ஸ்வ‌ந்‌த்பூ‌ரி‌ல் உ‌ள்ள லோகம‌ண்டி எனு‌ம் ச‌ந்தை‌யி‌‌ல் தா‌ன் வை‌த்‌திரு‌ந்த 280 ரூபாயை கோம‌ள் ‌திருடி ‌வி‌ட்டதாக அ‌ஞ்சு கடா‌ரியா எ‌ன்பவ‌ர் புகா‌ர் அ‌ளி‌த்தா‌ர்.

இ‌ந்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் கோமளை அடி‌த்து‌த் து‌ன்புறு‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌ந்த கா‌ட்‌சி தொலை‌க்கா‌ட்‌சிக‌ளிலு‌ம் ஒ‌ளிபர‌ப்பு செ‌ய்ய‌ப்ப‌ட்டுள‌ள்து.
கோமளை காவ‌ல‌ர் அடி‌த்து‌த் து‌ன்புறு‌த்து‌ம்போது அ‌ங்கே மேலு‌ம் 6 காவல‌ர்களு‌ம் இரு‌ந்து‌ள்ளன‌ர். அ‌‌வ‌ர்களு‌ம் இதனை க‌ண்டு கொ‌ள்ளாம‌ல் இரு‌ந்து‌ள்ளன‌ர். அ‌தி‌ல் இர‌ண்டு காவல‌ர்க‌ள் த‌ங்க‌ள் ப‌ங்கு‌க்கு அ‌ந்த ‌சிறு‌மியை அடி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த ச‌ம்பவ‌த்தை தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் பா‌ர்‌த்த பொதும‌க்க‌ளி‌ல் பலரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியடை‌ந்து, அ‌ம்மா‌நில காவ‌ல்துறை‌த் தலைவ‌ரிட‌ம் புகா‌ர் அ‌ளி‌த்து‌ள்ளன‌ர். இதையடு‌த்து காவ‌ல்துறை துணை ஆ‌ய்வாள‌ர் ‌ஷ‌‌ியா‌ம்லா‌ல் ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். ம‌ற்றொரு காவல‌ர் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.
அ‌ங்‌கிரு‌ந்த 6 காவல‌ர்க‌ள் ‌மீது‌ம் தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட ம‌ற்று‌ம் பழ‌ங்குடி ம‌க்களு‌க்கு எ‌திரான வழ‌க்குக‌ள் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. தேவை ஏ‌ற்ப‌ட்டா‌ல் 2 காவல‌ர்க‌ள் கைது‌ம் செ‌ய்ய‌ப்படலா‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :