மூளையின் திறனை அதிகரிப்பது பழக்க வழக்கங்களே!

Webdunia| Last Modified திங்கள், 3 டிசம்பர் 2007 (17:37 IST)
பு‌தி‌ர் போ‌ட்டிக‌ளி‌ல் ந‌ம்மா‌ல் வெ‌ற்‌றி பெறமுடிய‌வி‌ல்லையே எ‌ன்று யாரு‌ம் வரு‌த்த‌ப்பட‌‌த் தேவை‌யி‌ல்லை. ஏனெ‌ன்றா‌ல் மூளை‌யி‌ன் ஆ‌ற்ற‌ல் நமது உட‌ல் - மன‌‌ரீ‌‌தியான உவகை, பு‌ன்னகை, ஈடுபாடு, மன‌திரு‌ப்‌தி, பா‌லிய‌ல் உறவு ஆ‌கிய கார‌ணிக‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌தீ‌ர்மா‌‌னிக்க‌ப்படுவதா‌ல், இவை எ‌ல்லா‌ம் ஒருசேர அமையு‌ம் போது பு‌தி‌ர் போ‌ட்டிக‌ளி‌ல் ந‌ம்மா‌ல் எ‌ளி‌தி‌ல் வெ‌ற்‌றி பெற முடியு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

காலை உண‌வி‌ல் இறை‌ச்‌சி, கரு‌ப்பு‌ச் சா‌க்லெ‌ட்டை சே‌‌ர்‌த்‌து உ‌ட்கொ‌ள்ளு‌ம் போது ந‌ம் உடலு‌க்கு தேவையான ச‌ா‌ம்ப‌ல் ச‌த்து ‌கிடை‌க்‌கி‌ன்றன. பா‌லிய‌ல் உறவானது வா‌ழ்‌க்கை‌யி‌ன் ‌பி‌ற்பகு‌தி‌க்கு தேவையான ச‌க்‌‌தியை‌த் தருவதாகவு‌ம் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. மூளை‌‌யி‌ன் ‌திறனை அ‌திக‌ரி‌க்க ‌விரு‌ம்புவ‌ர்க‌ள் புகை‌பிடி‌ப்பது உ‌ள்‌ளி‌ட்ட பழ‌க்க‌ங்களை கொ‌ண்டிரு‌க்க‌க் கூடாது.
வீ‌ட்டு‌ப்பாட‌ம் செ‌ய்யாம‌ல் ஏமா‌ற்று‌ம் குழ‌ந்தைகளை, க‌ட்டி‌த்தழு‌வித் தட்டிக் கொடுத்து அ‌வ‌ர்களை‌ச் ச‌த்தமாக படி‌க்க‌ச் சொ‌ல்ல வே‌ண்டு‌ம். அதே‌போ‌ன்று குழ‌ந்தைகளை படி‌க்க வை‌க்கு‌ம் முறைகளை தெ‌ரி‌ந்து‌க் கொ‌ண்டு அத‌ன்படி முய‌ன்றா‌ல் குழந்தைக‌ளி‌ன் மூளை‌யி‌ன் ‌திறனை அ‌திக‌ரி‌க்க இயலு‌ம். நா‌ம் உ‌ண்ணு‌ம் உணவு, குடி‌க்கு‌ம் பான‌ங்க‌ள், ப‌ள்‌ளி‌யி‌ல் க‌ல்‌வி க‌ற்பிக்கும் முறை, எ‌ந்த வகையான உண‌ர்வுகளை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்பவையெ‌ல்லா‌ம் நமது மூளை ‌திற‌னி‌ன் அளவை ‌நி‌ர்ண‌யி‌க்கு‌ம் கார‌ணிகளாக உ‌ள்ளன எ‌ன்று நம‌க்கு நாமே க‌ற்று‌க் கொடு‌ப்பது, மூளை‌க்கு ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்கு‌ம் முறை தொட‌ர்பான நூ‌லி‌ன் ஆ‌சி‌ரிய‌ர் ம‌த்‌திய லங்காஷியர் ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌ன் வ‌ணிக‌யிய‌ல் துறை பேரா‌சி‌ரிய‌ர் டெ‌ர்‌ரி ஹா‌ர்‌னீ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
நமது வா‌ழ்‌க்கை அமை‌ப்பு முறை த‌ர்‌க்க ‌ரீ‌தியான அ‌றிவா‌ற்றலை வா‌ழ்‌வி‌ன் ‌பி‌ற்பகு‌தி‌யி‌ல் தா‌ன் ம‌னித‌ன் பெருமள‌வி‌ல் அ‌திக‌‌ரி‌த்து‌க் கொ‌ள்‌ள வ‌ழிவகை செ‌ய்து தரு‌கிறது. மூளை‌யி‌ன் ‌திறனை அ‌திக‌ரி‌‌ப்ப‌தி‌ல் உடலுறவு மு‌க்‌கிய ப‌ங்கா‌ற்று‌கிறது. உடலுற‌வி‌ன் போது மூளை‌யி‌ல் 7 ‌விதமான வே‌தி‌யிய‌ல் மா‌ற்ற‌ங்க‌ள் ‌நிக‌ழ்‌கி‌ன்றன. இது மூளை‌யி‌ன் இய‌ங்கு ‌திறனை அ‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்‌கிறது. உட‌லி‌ல் அ‌திக‌ரி‌க்கு‌‌ம் ஆ‌க்‌ஸிடா‌சி‌ன் அளவு மூளையை பு‌திய முய‌ற்‌சிகளை செ‌ய்யவு‌ம், ‌பிர‌ச்சனைகளை எ‌தி‌ர் கொ‌ள்ளவு‌ம் இ‌ற்த வகையான ஹா‌ர்மோ‌ன்க‌ள் உதவு‌கி‌ன்றன.
கரு‌ப்பு‌ச் சா‌க்லெ‌ட்டி‌ல் உ‌ள்ள மெ‌க்‌னீ‌சிய‌ம், ஆன்டிஆ‌க்‌ஸிட‌ண்‌ட் ஆ‌கியவை மூளை‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ஆ‌க்‌ஸிஜ‌ன் அளவை அ‌திக‌ரி‌ப்பதுட‌ன் ‌ஸ்டோ‌க்‌கி‌ல் இரு‌ந்து மூளை‌க்கு ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பையு‌ம் குறை‌க்‌கிறது‌. குறை‌ந்த அளவு கொழு‌ப்பு‌ச் ச‌த்து‌ள்ள உணவுகளை உடகொ‌ண்டா‌ல் மூளை‌யி‌ன் செய‌ல்பா‌ட்டை அ‌திக‌ரி‌க்க முடியு‌ம் எ‌ன்று‌ம் அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
குழ‌ந்தைகளா‌ல் த‌‌னியாக ‌வீ‌ட்டு‌ப் பாட‌ங்களை ‌சிற‌ப்பாக மே‌ற்கொ‌ள்ள இயலாது. அவ‌ர்க‌ள் பெ‌ற்றோ‌ர், ந‌ண்ப‌ர்க‌ள், சக மாணவ‌ர்களுட‌ன் இரு‌க்கு‌ம் போது ‌வீ‌ட்டு‌ப்பாட‌ங்களை ‌சிற‌ப்பாக மே‌ற்கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் டெ‌ர்‌ரி ஹா‌ர்‌னீ கூ‌றியு‌ள்ளா‌ர். வா‌ழ்‌க்கை முறை, எ‌ண்ண‌ம், சு‌ற்று‌ச்சூழ‌ல், உணவு‌ப் பழ‌க்க‌ங்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட கார‌ணிக‌ள் மூளையை ‌‌சிறப்பாக செய‌ல்பட வை‌க்‌கி‌ன்றன எ‌‌ன்று அவ‌ர் கூறினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :