மாணவர்களை அடிப்பதை தடுக்க நடவடிக்கை

Webdunia| Last Modified சனி, 11 ஆகஸ்ட் 2007 (11:05 IST)
பள்ளியிலபடிக்குமமாணவர்களை ஆசிரியர்களஅடித்து துன்புறுத்தி, தண்டனைகள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய குழந்தைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி சாந்தா சின்கா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், தற்போது பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகள் அதிகமாக நடக்கின்றன. இது மனித உரிமைகளின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது. மாணவ, மாணவிகளை துன்புறுத்துவதற்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இத்தகைய கொடுமைகள் நடக்காத வண்ணம் பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பது ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் கடமையாகும்.
இத்தகைய தண்டனைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாமல் இருக்க கல்வித்துறை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அடித்து துன்புறுத்துவதை தட்டிக்கேட்பதற்கும், அதை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்பதை கண்காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலமாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
பள்ளிக்கூடங்களில் தண்டனைகள் அளிப்பது வழக்கமான நடவடிக்கைதான் என்று ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதையும், புகார் அளிப்பதற்கு உரிமை இருக்கிறது என்ற நம்பிக்கையையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்துப் பள்ளிக்கூடங்கள், விடுதிகள், காப்பகங்கள், மற்றும் பொது நிறுவனங்களில் குழந்தைகள் தங்களது குறைகளை எடுத்துச் சொல்வதற்கு ஒரு அமைப்பு இருக்க வேண்டும். இதற்கு தன்னார்வ அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் புகார் அளிப்பதற்கு ஒரு புகார் பெட்டி வைக்க வேண்டும். அந்த புகார்களின் அடிப்படையில், புகார் அளிப்பவர் யார் என்று தெரியாமல் இருந்தால்கூட அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் இருக்கும் பெற்றோர்-ஆசிரியர் கழகம் உள்ளிட்ட வேறு சில அமைப்புகள் மாதந்தோறும் இது போன்ற புகார்களின் மீது காலம் கடத்தாமல் உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். அவ்வாறு பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்களும், குழந்தைகளும் இத்தகைய தண்டனைகளைப்பற்றி பயமின்றி பேசுவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இது குழந்தைகளின் பள்ளிக்கூட வாழ்க்கையை பாதிக்கும்.

மாநில, மாவட்ட, பஞ்சாயத்து அளவில் குழுக்கள் அமைத்து இதுபோன்ற புகார்களை உடனடியாக விசாரிக்க கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2 மாதத்துக்குள் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டுமஎன்றகடிதத்திலகூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :