பாறையிலான முதல் கிரகம் கண்டுபிடிப்பு

Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (01:22 IST)
சூ‌ரிய ம‌ண்டல‌த்‌தி‌ற்கு வெ‌ளியே ஏதேனு‌ம் ‌கிரக‌ம் இரு‌க்‌கிறதா எ‌ந்த தேடுத‌ல் எ‌ப்போது‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌ம் இரு‌க்கு‌ம். அ‌ந்த தேட‌லி‌‌ன் ‌விளைவாக சூரிய மண்டலத்துக்கு வெளியே பாறையிலான முதல் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் விஞ்ஞானிகளுக்கு இருக்கிறது. இதனால் வேறு கிரகங்களில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்கான தேடும் படலத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டு உள்ளனர். மேலு‌ம், சூ‌ரிய‌க் குடு‌ம்ப‌த்தை‌த் த‌விர வேறு கோ‌ள்க‌ள் எ‌ங்கு‌ம் உ‌ள்ளதா எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் ஆ‌ய்வு நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
சூரிய மண்டலத்துக்கு வெளியே 300-க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் அவை உறுதியில்லாதவை. உயிரினம் உயிர் வாழ வேண்டுமானால் உறுதியான தரைப்பகுதி இருந்தால் தான் முடியும். 300-க்கும் மேற்பட்ட கிரகங்களும் வெறும் வாயுவால் ஆனவை.

சமீபத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் மேற்கண்ட ஆராய்ச்சியில் உறுதியான பாறை வடிவிலான ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள முதல் பாறை கிரகம் ஆகும். பாறை வடிவிலான கிரகம் கண்டுபிடித்து இருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கு கோரோட்-7டி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
நாம் கண்டுபிடித்த கிரகங்களிலேயே பூமி மாதிரி இருப்பது இந்த கிரகம் தான் என்று ஜெர்மனியில் உள்ள துரிங்கர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் டைரக்டர் ஆர்ட்டி ஹார்ட்செஸ் தெரிவித்தார்.

மேலு‌ம், இந்த கிரகம், சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. இதனால் இந்த கிரகத்தில் வெப்பநிலை 3600 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இது தன் நட்சத்திரத்தை 20 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. மணிக்கு 466 ஆயிரம் மைல் வேகத்தில் இது சுற்றி வருகிறது. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் சூரியனை சுற்றிவர 88 நாட்கள் ஆகிறது எ‌ன்று கூ‌றினா‌ர் டைரக்டர் ஆர்ட்டி.


இதில் மேலும் படிக்கவும் :