அதில் குறிப்பிடத்தக்க ஒரு குறைபாடு அல்லது நோய், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள். இதுபோன்ற குழந்தைகளுக்கு போதிய சிந்தனை சக்தி, ஞாபகசக்தி இருப்பதில்லை. மூளையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப உடலில் குறைபாடுகள் இருக்கும். மாறு கண், முட்டைக்கண், காது கேளாமை, கை, கால் செயல் இழப்பு, எச்சில் ஒழுகுதல் என அவலட்சணமாக தோற்றமளிக்கும்.
மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்களை மருத்துவர்கள் கூறுகின்றனர். நெருங்கிய உறவில் திருமணம் (இதுபற்றி இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனினும், மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி இது), கர்ப்பிணிகள் தவறான மருந்துகளை சாப்பிடுவது, கீழே விழுந்து அடிபடுதல் போன்றவை முக்கியக் காரணங்களாகின்றன. மருத்துவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாமை, கவனக்குறைவு போன்றவைகளும் சில நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன.
Webdunia|
குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்' என்கிறார் வள்ளுவர். குழந்தைகளின் மழலை மொழியின் இனிமையை உணராதவர்கள் யாழிசை, குழலிசை போன்றவற்றை இனிது என்கின்றனராம். குழந்தைகளையும், மழலை பேச்சையும் விரும்பாதவர்கள் இல்லை. கல் நெஞ்சையும் கரைய வைக்கும் மென்மை மழலைகளுக்கு மட்டுமே உண்டு. குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள்:. அதனால்தான் அவர்களை தெய்வத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், சமீபகாலமாக நம்மிடையே தெய்வத்துக்கும் மேலான குழந்தைகள் அதிகரித்து வருகின்றன. ஆம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தான் அந்த தெய்வக் குழந்தைகள்!நவீன மருத்துவம், நாளொரு ஆராய்ச்சியும் பொழுதொரு கண்டுபிடிப்புகளுமாய் அதிவேகமாய் வளர்ந்து வருவதை மறுப்பதற்கில்லை. எனினும் சில கொடிய நோய்களுக்கு அல்லது குறைபாடுகளுக்கு நவீன மருத்துவத்தால்கூட தீர்வுகாண முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.
பிறந்தவுடனேயே குழந்தைகள் அழவேண்டும். அப்போதுதான் மூளைக்கு ரத்த ஓட்டம் பாய்ந்து,