தாயை பராமரிக்காத மகன் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு

Webdunia|
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் லட்சுமி குட்டி. 84 வயதான இவர் சிறிது பக்கவாத நோயாலும் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை அவரது மூத்த மகன் ரமணன், இளைய மகன் மற்றும் 3 மகள்களும் பாதுகாத்து பராமரிக்கவில்லை.

இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் அவரை முதலில் ஒரு மரு‌த்துவமனை‌யில் சேர்த்து சிகிச்சை அளித்து பின்னர் ஒரு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

கடந்த ஆண்டு மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் லட்சுமி குட்டியின் மூத்த மகன் ரமணன் (58) கைது செய்யப்பட்டார். தாயை பராமரிக்காததாக அவர் மீதும், அவரது தம்பி மற்றும் 3 சகோதரிகள் மீதும் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்து இருப்பதும், வழக்கு பதிவு செய்து இருப்பதும் இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :