ஜனவரி 24 பெண் குழந்தை தினம்

Webdunia| Last Modified செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:25 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதியன்று பெண் குழந்தைகள் தினத்தை அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஆண், பெண் குழந்தைகள் சராசரி பிறப்பு விகிதத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெண் குழந்தைகளை ஒதுக்கும் செயல்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண் சிசுக்கள் மற்றும் பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதற்காக ஜனவரி 24ஆம் தேதியை பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நாளில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து, கல்வி போன்றவை விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்படும்.

இந்த நடவடிக்கைகளை மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :