சேவாலயா முர‌ளிதரனு‌க்கு ‌விருது

Webdunia| Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2009 (17:50 IST)
சேவாலயா அமை‌ப்பை நட‌த்‌தி வரு‌ம் முர‌ளிதரனு‌க்கு, அவரது ‌சிற‌ந்த சேவைய‌ை‌ப் பாரா‌ட்டி மெ‌ட்ரா‌ன் செ‌ன்னா பா‌ட்னா ரோ‌ட்ட‌ரி ‌கிள‌ப் சா‌ர்‌பி‌ல் ‌விருது வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை‌‌யி‌ல் நட‌ந்த ‌விழா‌வி‌ல் மு‌ன்னா‌ள் மாவ‌ட்ட ஆளுந‌ரான ‌‌பி.‌டி. ‌பிரபாக‌ர், சேவாலயா முர‌ளிதரனு‌க்கு இ‌ந்த ‌விரு‌தினை வழ‌ங்‌கினா‌ர்.

பா‌க்க‌ம் ‌எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல் ஏழை‌க் குழ‌ந்தைக‌ளி‌ன் க‌ல்‌வி‌க்காக ப‌‌ள்‌ளி ஒ‌ன்றை ந‌ட‌த்‌தி‌ வரு‌கிறா‌ர் முர‌ளிதர‌ன். பு‌த்தக‌ம், ‌சீருடை, உணவு, க‌ல்‌வி என அனை‌த்து‌ம் இலவசமாக இ‌ந்த ப‌ள்‌ளி‌யி‌ல் ப‌யிலு‌ம் மாணவ‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. இவரது முய‌ற்‌சி‌யி‌னா‌ல் அ‌ங்கு மாணவ‌ர்களு‌க்கான ‌விடு‌தியு‌ம், மு‌தியவ‌ர்களு‌க்கான இ‌ல்லமு‌ம் நட‌த்‌த‌ப்படு‌கிறது.
விரு‌தினை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ண்டு பே‌சிய முர‌ளிதர‌ன், இ‌ந்த ‌விருது எ‌ங்களது அமை‌ப்‌பி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் அனைவரது சேவை ம‌ற்று‌ம் ஒ‌த்துழை‌ப்‌பி‌ற்காக‌க் ‌கிடை‌த்த ‌விருதாக‌க் கருது‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :