சிலந்தியைப் பற்றி அறிவோம்

Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:18 IST)
பொதுவாக சிலந்தி என்றதும், சிலந்தி வலையும் நமது நினைவுக்கு வரும். சிலந்தி வாழ்வதற்காக கட்டப்படுவதே சிலந்தி வலை.

சிலந்தியின் வாயில் இருந்து வரும் எச்சிலைக் கொண்டு இந்த வலைப் பின்னப்படுகிறது.

இந்த வலையில் வந்து விழும் பூச்சிகளை இறையாகக் கொண்டு சிலந்தி வாழ்கிறது. வலையின் ஆயுட்காலம் முடிந்து அது பழையதாகும் போது அந்த வலையை விட்டு விட்டு வேறொரு வலையைப் பின்னத் தொடங்குகிறது சிலந்தி.
பொதுவாக சிலந்தி பூச்சி இனத்தைச் சேர்ந்தது. தனியாக கூடு கட்டி வாழும் வகையும், கோடு போட்ட சிலந்தி என்றும், சிறிய சிலந்தி என்றும் பல வகைகள் உள்ளன.

ஆர்ப் வீவர் என்ற கோடு போட்ட ஒரு வகை சிறிய சிலந்தி கூட்டமாக சேர்ந்து கூடு கட்டுகின்றன. இந்த வகை சிலந்திகள் ஆப்ரிக்காவிலுள்ள மழைக் காடுகளில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன.
அளவில் சிறியதாக இருந்தாலும் காடுகளில் இரண்டு மரங்களை இணைப்பது போன்றும், கிளைகளை இணைத்து பல மீட்டர் நீளம் கொண்ட வலையைப் பின்னும்.

இந்த வலை துணியை வலையாக விரித்தது போன்று காணப்படும். வலையில் வந்து விழும் பூச்சிகளை எளிதில் பிடித்து உண்ணும்.

இந்த சிலந்தியின், வலை, எளிதில் அழிந்து போகாது. மழை, காற்று மற்றும் எந்த விலங்குகளாலும் சேதம் ஏற்பட்டுவிட்டால், உடனடியாக பல சிலந்திகள் கூட்டாகச் சென்று வேலை செய்து வலையை சரி செய்கின்றன.
வலையில் வந்து விழும் உணவை எல்லா சிலந்திகளும் பகிர்ந்து உண்ணும். பெண் சிலந்திகள் வேட்டையாடுவது மற்றும் வலையில் உள்ள சிலந்திகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்திவரும்.


இதில் மேலும் படிக்கவும் :