சிறுவர்களுக்கான கதைப் போட்டி

Webdunia|
மாணவ, மாணவியர்கள் பங்கு பெறும் வகையில் கதைப் போட்டியை கனவு அமைப்பு நடத்துகிறது.

கனவு அமைப்பு சார்பில் சிறந்த கதைகளுக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணாக்கர்கள், சிறுவர் கதைகளை எளிய நடையில் 3 முதல் 5 பக்கங்கள் வரை எழுதி அனுப்பலாம். சுயமான படைப்புகளாக இருக்க வேண்டும். தங்களது கதைகளை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கதைகளை அனுப்பும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முழு விவரத்துடன் அனுப்ப வேண்டும்.

கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி

சுப்ரபாரதி மணியன்,
கனவு அமைப்பு,
இலக்கிய இதழ், 8/2835 பாண்டியன் நகர்,
திருப்பூர் - 641602தொலைபேசி - 0421-2350199, 9486101003


இதில் மேலும் படிக்கவும் :