கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி

Webdunia|
WD
இணைய‌த்‌தை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்தவ‌ர்க‌ள் அனைவரு‌க்கு‌ம் கூகுள் ப‌ற்‌‌றியு‌ம் தெ‌ரியு‌ம். எ‌ந்தவொரு ‌விஷய‌த்தையு‌ம் ஒரு நொடி‌யி‌ல் அ‌றி‌ந்து கொ‌ள்ள உதவு‌ம் கூகு‌ள் இணைய தள‌ம், குழ‌ந்தைக‌ள் ‌தின‌த்தையொ‌ட்டி நவ‌ம்ப‌ர் 14ஆ‌ம் தே‌தி இ‌ந்‌திய குழ‌ந்தைகளு‌க்கு ஓ‌விய‌ப் போ‌ட்டி ஒ‌ன்றை நட‌த்‌தியது.

இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் குழ‌ந்தைக‌ள், கூகு‌ள் எ‌ன்ற வா‌ர்‌த்தையை மையமாக வை‌த்து, இ‌ந்‌திய பெருமையை ‌விள‌க்கு‌ம் ‌விதமாக ஓ‌விய‌‌ம் வரைய வே‌ண்டு‌ம்.

இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் வெ‌ற்‌றி பெறு‌ம் குழ‌ந்தை‌யி‌ன் பட‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் கூகு‌ள் இணைய‌த்‌தி‌ன் முக‌ப்‌பி‌ல் வெ‌ளியாகு‌ம். மேலு‌ம், ‌சிற‌ந்த ஓ‌விய‌த்தை வரையு‌ம் குழ‌ந்தை‌க்கு ஒரு மடி‌க் க‌ணி‌னியு‌ம் ப‌ரிசாக வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.
குழந்தைகளின் புதுமை படைக்கும் திறனை வளர்க்கும் விதத்தில் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 4 ஆயிரம் குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பரிசுக்கான சிறந்த ஓவியத்தை தேர்வு செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.

இ‌தி‌ல் ஏராளமான குழ‌ந்தைக‌ள் ப‌ங்கே‌ற்று த‌ங்களது த‌னி‌த் ‌திறமையை‌க் கா‌ட்டின‌ர். ப‌ரிசு பெரு‌ம் ஓ‌விய‌த்தை தே‌ர்வு செ‌ய்ய தே‌ர்வு‌க் குழு‌வின‌ர் ‌திண‌றி‌ப் போன‌தி‌ல் இரு‌ந்தே அவ‌ர்களது ‌திறமையை நா‌ம் அ‌றியலா‌ம்.
WD
அதனால் சிறப்பான 600 படங்களை தேர்வு செய்து இணைய தளத்தில் வெளியிட்டனர். 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடந்த போட்டியில் முதன்மையான 30 ஓவியங்களை வரைந்த மாணவர்களின் கருத்துகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டது.
இறுதியில் அந்த 600 படங்களிலும் சிறந்த 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு அறிவிக்கப்பட்டது. மூன்று பரிசுகளையும் வடமாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளே தட்டிச் சென்றனர். முதல் பரிசு பெற்றவர் அரியானா மாநிலம் குர்கான் என்ற இடத்தை சேர்ந்த புருபிரதாப்சிங் என்ற 4-ம் வகுப்பு மாணவர் ஆவார். 2-வது பரிசு போபால் நகரைச் சேர்ந்த ஹாதியா அப்ரிடி என்ற 1-ம் வகுப்பு மாணவருக்கும், 3-வது பரிசு நாசிக் நகரைச் சேர்ந்த பி.ஜாதவ் என்ற 8-ம் வகுப்பு மாணவருக்கும் கிடைத்தது.
WD
மாணவர்களின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவின் சிறப்புகளை குறிப்பிடும் வகையில் அமைந்திருந்தன. முதல் பரிசு பெற்ற பிரதாப் சிங்கின் ஓவியத்தில், தேசியப் பறவையான மயில் (எ) , சுதந்திரத்தை உணர்த்தும் கல்வி (ஞ) , சந்திரனில் தண்ணீரை கண்டுபிடித்த சந்திரயான் (ஞ) , இந்தியாவின் வளர்ச்சி (எ) , தியாகத்தைக் குறிக்கும் அமர்ஜவான் ஜோதி (க) , மற்றும் காந்திஜி (உ) ஆகிய படங்கள் இடம்பெற்று கூகுளின் லோகோவை உருவாக்கும் வகையில் டூடுல் கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
முதல் பரிசு பெற்ற புருபிரதாப்சிங்கிற்கு ஒரு லேப்டாப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் அவர் படிக்கும் பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டது. அவர் வரைந்த கார்ட்டூன் கூகுள் இணையத்தின் முதல்பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.


இதில் மேலும் படிக்கவும் :