கு‌ழ‌ந்தைக‌ளி‌ன் உணவு‌ முறை ச‌ரியானதா

MILK
Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (21:03 IST)
webdunia photo
WD
குழ‌ந்தைகளு‌க்கு நா‌ம் அ‌ன்றாட‌ம் அ‌ளி‌க்கு‌ம் பா‌லி‌ல் இரு‌ந்து, அ‌வ்வ‌ப்போது வா‌ங்‌கி‌க் கொடு‌க்கு‌ம் நொறு‌க்‌கு‌த் ‌தீ‌ணி வரை எ‌த்தனையோ ‌விஷய‌ங்களை நா‌‌ம் கவ‌னி‌க்க வே‌ண்டி உ‌ள்ளது.

முத‌லி‌ல் நா‌ம் பா‌ல் ம‌ற்று‌ம் பா‌ல் சா‌ர்‌ந்த பொரு‌ட்களை‌ப் ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்.

நம‌க்கு பா‌ல் எ‌ன்றா‌ல் பா‌க்கெ‌ட்டி‌ல் அடை‌த்து வரு‌ம் பா‌ல்தா‌ன் தெ‌ரியு‌ம். இ‌ந்த பா‌லி‌ல் எ‌ன்ன‌‌க் கல‌ந்து‌ள்ளது, எ‌ன்ன ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்பதை பலரு‌ம் அ‌றிவ‌தி‌‌ல்லை.
பெரு‌ம்பாலான த‌னியா‌ல் பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ள், பா‌லி‌ன் அட‌ர்‌த்‌தி அ‌திகமாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌‌ற்காக பல ரசாயன‌‌ப் பொரு‌ட்களை‌க் கல‌க்‌கி‌ன்றன‌ர். எனவே குழ‌ந்தைகளு‌க்கு ஆ‌வி‌ன் பா‌ல் வா‌ங்‌கி அ‌ளி‌ப்பது ‌சிற‌ந்தது.

அ‌‌திலு‌ம், பாலை வெறுமனே பொ‌ங்‌கி வ‌ந்தது‌ம் இற‌க்‌கி‌விட‌க் கூடாது. பா‌லி‌ல் 1 ட‌ம்‌ள‌ர் ‌த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு, பா‌ல் பொ‌ங்‌கியது‌ம் ‌தீயை குறை‌த்து வை‌த்து ந‌ன்கு கொ‌தி‌க்க‌வி‌ட்டு‌த்தா‌ன் குழ‌ந்தைகளு‌க்கு‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம். அதே‌ப்போ‌ல் பா‌ல் எ‌ப்போது‌ம் ‌தீ‌யிலேயே இரு‌ப்பது‌ம் பல ‌தீய ‌விளைவை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்.
ச‌ரி பாலை முடி‌த்தா‌கி‌வி‌ட்டது. அடு‌த்தது ‌நீ‌ங்க‌ள் சமை‌த்து‌க் கொடு‌‌க்கு‌ம் உணவுக‌ள். ‌நீ‌ங்க‌ள் கொடு‌க்கு‌ம் உணவுக‌ள் ச‌த்தானதாகவு‌ம், உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யி‌ன் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடியதாகவு‌ம் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அ‌‌வ‌சிய‌ம். ‌‌கீரை, ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிக‌ள், பழ‌ங்க‌ள் போ‌ன்ற‌வை ‌தினமு‌ம் அவ‌ர்களது உண‌‌வி‌ல் இட‌ம்பெறுவது அவ‌சிய‌ம்.
அடு‌த்தது கடைக‌ளி‌ல் வா‌ங்‌கி‌த் தரு‌ம் நொறு‌க்கு‌த் ‌தீ‌ணிக‌ள். இ‌தி‌ல் பல உணவு‌ப் பொரு‌ட்க‌ள் குழ‌ந்தைக‌ள் சா‌ப்‌பிட ஏ‌ற்க‌த் த‌க்கவை அ‌ல்ல.

இதுபோ‌ன்ற உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌வி‌ற்பனைகு தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் காட்டப்படும் ‌விள‌ம்பர‌ங்களு‌ம், அ‌தி‌ல் நடி‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌ம், காரணமா‌கி‌‌ன்றன‌ர். விளம்பரங்களில் காட்டப்படும் உணவுப் பொருட்களில் பெரும்பாலும் குழந்தைகளை குறி வைத்தே தயாரிக்கப்படுகின்றன. அவ‌ற்றை‌ப் பா‌ர்‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌ம் அதனை ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடு‌கி‌ன்றன‌ர்.
இதுபோ‌ன்ற பெரும்பாலான தின்பண்டங்கள், எண்ணையில் பொரிக்கப்பட்ட... உருவாக்கப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களே. இவை அனைத்துமே குழந்தைகளின் உடலை கெடுக்கக் கூடியவை. இன்றைய நாகரீக உலகின் நவீன தின்பண்டங்களான இவை, புதிய வடிவங்களில் பாக்கெட் செய்யப்பட்டு பல நாட்கள் கடைகளில் தொங்கவிடப் படுகின்றன. ரசாயனக் கலவையின் துணையோடுதான் இவை உற்பத்தி செய்யப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :