குழ‌ந்தை க‌ற்ப‌ழி‌ப்பு‌க் கா‌ட்‌சி இணைய தள‌த்‌தி‌ல்

Webdunia| Last Modified வெள்ளி, 5 அக்டோபர் 2007 (12:31 IST)
3 வயது‌க் குழ‌ந்தை க‌ற்ப‌ழி‌க்க‌ப்படு‌ம் கா‌ட்‌சிகளையு‌ம் புகை‌ப்பட‌ங்களையு‌ம் இணைய தள‌த்‌தி‌ல் ப‌கி‌ர்‌‌ந்து கொ‌ண்ட 41பே‌ர் அமெ‌ரி‌க்கா‌வி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌நியூஜெ‌ர்‌சி மாகாண‌த்‌தி‌ல் முறைகேடான இணைய தள‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்து‌ம் நப‌ர்களை‌க் கட‌ந்த 2 மாத‌ங்களாக காவ‌ல்துறை‌யின‌ர் க‌ண்கா‌ணி‌‌த்து வ‌ந்தன‌ர்.

அ‌ப்போது மை‌ஸ்பே‌ஸ்.கா‌ம், ஃபே‌ஸ்பு‌க்.கா‌ம் ஆ‌கிய இரு இணைய தள‌ங்க‌ளி‌ல் உறுப்‌பின‌ர்களாக உ‌ள்ள ‌‌சில‌ர் உலக‌ம் முழுவது‌ம் உ‌ள்ள த‌ங்க‌ளி‌ன் ந‌ண்ப‌ர்களு‌க்கு பா‌லிய‌ல் வ‌ன்முறைக‌ள் ‌நிறை‌ந்த கா‌ட்‌சிகளை‌ப் பர‌ப்‌பி வ‌ந்தது தெ‌ரியவ‌ந்தது.
கு‌றி‌ப்பாக ஒரு ஒ‌ளி‌ப்ப‌ட‌த்‌தி‌ல் 37வயது நப‌ர் 3வயது‌க் குழ‌ந்தையை‌க் க‌ற்ப‌‌ழி‌ப்பது போ‌ன்ற கா‌ட்‌சிக‌ள் இரு‌ந்தன. இ‌க்கா‌ட்‌சியை‌ப் பர‌ப்‌பிய அனைவரும் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

இதுவரை 14 வயது முத‌ல் 71 வயது வரை‌யிலான 41 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இவ‌ர்களு‌க்கு 18 மாத‌ங்க‌ள் முத‌ல் 10ஆ‌ண்டுக‌ள் வரை ‌சிறை த‌ண்டனை ‌கிடை‌த்து‌ள்ளது.
இவ‌ர்க‌‌ளிட‌மிரு‌ந்து ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட டி‌விடி‌க்களு‌ம், புகை‌ப்பட‌ங்களு‌ம் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. அவ‌ற்‌றி‌ல் 80‌க்கும் மே‌ற்ப‌ட்ட டி‌விடி‌க்க‌ளி‌ல் குழ‌ந்தை‌யி‌ன் கா‌ட்‌சிக‌ள் இரு‌ந்தன எ‌ன்று காவ‌ல் அ‌திகா‌ரிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :