ஈயாக இல்லாமல் வண்டாக இருங்கள்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
குழந்தைகளே, நாம் எப்போதும் ஈயாக இல்லாமல் வண்டாக இருக்க வேண்டு என்று ராமகிருஷ்ணர் அறிவுறை வழங்குகிறார்.

அதாவது, வீட்டு ஈயானது ஒரு சமயம் உணவுப் பொருட்களின் மீது அமரும். அடுத்த சமயம், எங்காவது குருதியோல் அல்லது புண்களோ இருந்தால் அதன் மீதும் அமரும், மற்றொரு சமயம், இறைவனுக்காக வைக்கப்படும் நைவேத்தியத்தின் மீதும் அமரும்.

ஆனால், தாமரைப் பூவில் உள்ள தேனை அருந்தும் வண்டு,பூக்களைத் தவிர வேறு ஒன்றையும் ஒரு பொருட்டாகவே மதிக்காது.
எனவே எதன் மீது வேண்டுமானாலும் அமரும் ஈயைப் போன்று இல்லாமல், தேனை அருந்தும் வண்டு போல வாழ வேண்டும் என்கிறார் ராமகிருஷ்ணர்.


இதில் மேலும் படிக்கவும் :