மனிதரின் தன்மை, சூழ்நிலைகளை உருவாக்குவது: வாசுதேவ் சிந்தனை

மனிதரின் தன்மை, சூழ்நிலைகளை உருவாக்குவது: வாசுதேவ் சிந்தனை


Sasikala|
* உங்களின் வாழ்வின் அனுபவமே, நீங்கள் வாழ்க்கையில் ஆழமாக ஈடுபடுவதில் தான் இருக்கிறது. ஈடுபாட்டுடன் நீங்கள் செய்பவை எல்லாம் எப்போதும் ஆனந்தமாக உள்ளதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஆழமான ஈடுபாடு இருந்தாலொழிய வாழ்க்கையின் அழகை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.

 
 
* யார் வேண்டுமானாலும் கடவுளை நேசிக்கலாம். ஏனெனில் கடவுள் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆனால், இந்தக்கணம் உங்கள் அருகில் இருப்பவரை நீங்கள் நேசிப்பதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுதான் சவால். இதைச் செய்வதற்கு மிகவும் தைரியம் தேவைப்படுகிறது.
 
* மனிதராகப் பிறந்துவிட்டால் நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்கிறீர்களோ, அதிலேயே சிக்கிவிடக்கூடாது. உங்களுக்கான சூழ்நிலைகளை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளின் தாக்கத்தில் வாழ்வது விலங்கின் தன்மை, மனிதரின் தன்மை, சூழ்நிலைகளை உருவாக்குவது!
 
* உங்கள் வாழ்க்கையில் அழகான சூழ்நிலைகள் வருகின்றன. கொடுமையான சூழ்நிலைகள் வருகின்றன. உங்களுக்கு ஒரே வாய்ப்பு தான். அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நீங்கள் மேலும் சிறந்தவராக, வலிமையானவராக மாறலாம் அல்லது உடைந்து நொறுங்கிப் போகலாம்!


இதில் மேலும் படிக்கவும் :