வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

ஆன்மீக மகான் வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் அற்புத நெறிகள்

ஆன்மீக மகான் வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் அற்புத நெறிகள்

சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.


 
 
* எந்த விதத்திலும் உணவில் புலால் சேர்க்கக்கூடாது. எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு உண்பது சிறப்பு. பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும் பயனுடையதாகும்.
 
* மாலை வேளையில் கொஞ்ச தூரம் வியர்க்கும்படியாக நடை பயில வேண்டும். இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது.
 
* கொலை, கோபம், சோம்பல், உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியவை. உற்சாகத்தை எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும்.
 
* உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே. தெய்வங்கள் பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும்.