ஷீரடி சாய்பாபாவின் போதனைகள்

ஷீரடி சாய்பாபாவின் போதனைகள்


Sasikala|
யார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன்.

 


நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.
 
அவர் என்னையே அகண்டமாக தியானம் செய்வார். நாக்கு என்னுடைய நாமத்தையே ஜபம் செய்யும். எங்கே போனாலும், எங்கிருந்து வந்தாலும் என்னுடைய சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பார்.
 
இவ்வாறு என்னுடன் ஒன்றிய பிறகு, செயல்புரிவது, செயல்புரியாதிருப்பது இரண்டையுமே மறந்துவிடுவார். எங்கே என்னுடைய சேவையில் இந்த அளவிற்கு பயபக்தி இருக்கிறதோ, அங்கேதான் நான் நிரந்தரமாகக் காத்திருக்கிறேன்.


இதில் மேலும் படிக்கவும் :