பெருந்தன்மை – ஸ்ரீ அன்னை

Webdunia| Last Modified புதன், 12 அக்டோபர் 2011 (17:01 IST)
தன்னைப் பற்றிய சிந்தையே இல்லாதிருப்பதில் ஓர் உயர்ந்த மாட்சி உள்ளது. தேவைகள் உடையவர்களாக இருந்தால் நமது பலவீனத்தை வற்புறுத்துவதாகும்.

ஒன்று வேண்டும் என்று கோரும்போது உன்னிடம் அது இல்லை என்று நிரூபணமாகிறது. ஆசைகள் இருப்பது பலவீனத்தின் அடையாளம், நமக்கு குறைகள் இருக்கின்றன, நம்மால் அவற்றை நீக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகும்.

ஆசைகள் இருப்பது நமது சுயகெளரவத்திற்கு இழுக்கு என்று உணர்ந்து அவற்றை விட்டுவிடும் அளவிற்காவது ஒரு மனிதனுக்குப் பெருந்தன்மை வேண்டும்.
வாழ்க்கையிடமிருந்தோ அதை இயக்கும் பர உணர்விடமிருந்தோ எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பது எவ்வளவு கேவலம், எவ்வளவு அஞ்ஞானம்? இது பராசக்தி அன்னைக்கு எதிரான பாவமன்றோ!
ஏனென்றால் நம்மால் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை. நமது உடலையும் நமது நெருங்கிய சுற்றுப்புறத்தையும் எவ்வளவு திட்டவட்டமாகவும் பூரணமாகவும் அனுபவிக்கிறோமோ அதேபோல் முழுப் பிரபஞ்சத்தையும் ஆனந்தமாய் அனுபவிக்க முடியும், நமது அகங்காரமே நமது ஜீவனின் எல்லைக்களைக் குறுக்கி இப்பேரனுபவம் நமக்கு கிடைக்காதபடி செய்கிறது.
பணிவு இன்றியமையாதத

பணிவு: அதன் எளிமை போற்றத்தக்கது.

உயர் ஜீவர்கள் எல்லோரும் மிகவும் எளிமையாகவும், பணிவுடையவர்களாகவும் இருப்பார்கள்.

சரியான சுய மதிப்பீடு: எளிமையும், பணிவும் உடையது, தான் முதன்மை பெற வேண்டும் என்று முயலாது.
நமது முயற்சிகள், நமது போராட்டங்கள், நமது வெற்றிகளும்கூட, எவ்வளவுதான் இருந்தபோதிலும் இன்னும் கடக்க வேண்டிய பாதையுடன் ஒப்பிடும்போது நாம் இதுவரை கடந்து வந்துள்ளது ஒன்றுமேயில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

உன்னைப் பெரியவனென்றோ சிறியவனென்றோ, மிகவும் முக்கியமானவனென்றோ கொஞ்சமும் முக்கியமில்லாதவனென்றோ கருதாதே. ஏனெனில் நம்மளவில் நாம் ஒன்றுமே இல்லை. நாம் எப்படி இருக்க வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றானோ அப்படி ஆவதற்காகவே நாம் வாழ வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :