தெய்வீகக் கூட்டுறவு - ரமண‌ர்

Webdunia|
FILE
சாதுக்களின் சத்சங்கம் கிடைத்துவிட்டால் அப்புறம் சமயச் சடங்குகள் எதற்கு? குளிர்ந்த தென்றல் வீசும் போது கைவிசிறிக்கு ஏது வேலை?

போதனை, பாடுவது, சாத்திரங்களைப் படிப்பது, புண்ணியம் செய்வது போன்றவற்றைப் பார்க்கிலும் ஞானியர் கூட்டு உயர்ந்த நிலை அளிக்கும்.

"சத்சங்கம்" என்கிறார்கள். சத்தோடு சேர்வது என்பது பொருள். சத்து ஞானியர் சேர்க்கை. ஞானியர் தொடர்பில் உங்களுக்கு அமைதி கிட்டாவிட்டால் அந்தச் சேர்க்கைக்கு அர்த்தமே இல்லை.
மிதக்கும் பொருள் மூழ்க வேண்டுமானால் அதன் மீது கனமான எடையை வைக்க வேண்டும். அதுபோல் சாதுக்கள் சங்கம் மனத்தை இதயத்தில் ஆழ்த்தி விடும்.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :