‌தி‌வ்ய தேச‌ங்க‌ளி‌ல் ஒ‌ன்றான ஸ்ரீர‌ங்க‌ம்‌

webdunia photoWD
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், மிகவும் புகழ்பெற்றதாகவும் விளங்குவது இந்த ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலாகும்.

ஸ்ரீர‌ங்கநாத‌ர் ப‌ள்‌ளி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் கோ‌யி‌ல் அமை‌ந்து‌ள்ள இட‌ம்தா‌ன் ஸ்ரீர‌ங்க‌ம். ‌திரு‌ச்‌சி‌‌யி‌லஇரு‌ந்து ‌மிஅரு‌கி‌லஅமை‌ந்து‌ள்ளதஸ்ரீர‌ங்க‌ம்.

ஸ்ரீர‌ங்கநாத‌ர் கோயிலின் தெய்வம் ஸ்ரீரங்கநாதர் - ரங்கநாயகி ஆவர். கோ‌யி‌‌ல் க‌ர்ப‌கிரக‌த்‌தி‌ல் ப‌ள்‌ளி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ர‌ங்கநாத‌ர் சுய‌ம்புவாக தோ‌ன்‌றியதாக‌க் கூற‌ப்படு‌கிறது.

ஸ்ரீரங்கநாதர் கோயிலின் கர்பக்கிரகத்தில் மூலவர் ஸ்ரீரங்கநாதர் பாம்புகளின் படுக்கையில் படுத்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

திருவர‌ங்க ‌திரு‌ப்ப‌தி, பெ‌ரிய கோ‌யி‌ல், பூலோக வைகு‌ண்ட‌ம் என ப‌ல்வேறு பெய‌ர்க‌ளி‌ல் அ‌றிய‌ப்படு‌கிறதஇ‌த்‌திரு‌த்தல‌ம்.

webdunia photoWD
மேலும் விஷ்வக்சேனா, ராமர், கிருஷ்ணர், நாச்சியார், சக்கரத்தாழ்வார், கருடர், ஹனுமான், ஆண்டாள் ஆகியோருக்கென தனித்தனி சன்னிதானங்களும் இ‌க்கோ‌யி‌லி‌ல் உள்ளன.

156 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் 7 திருவீதிகளைக் கொண்டது. அதிலும் 7 திருவீதிகளும் ஒரே அமைப்பில் காட்சியளிக்கும். முதன் முறையாக செல்பவர்கள் அல்ல.. பல முறை சென்றவர்கள் கூட இந்த 7 திருவீதிகளில் குழம்பித்தான் போவார்கள்.

இக்கோயிலில் அமைந்திருக்கும் தூண்களையும், அதில் உள்ள சிற்பங்களையும் கண்டு ரசிக்கலா‌ம்.

கா‌வி‌ரி‌க்கு‌ம் கொ‌ள்‌ளிட‌‌த்‌தி‌ற்கு‌ம் நடுவே அமை‌ந்து‌ள்ள இ‌ந்த அழ‌கிய ஸ்ரீர‌ங்க‌‌த்‌தி‌ல் ப‌ள்‌ளி‌ கொ‌ண்டிரு‌க்கு‌ம் ர‌ங்கநாதரை‌க் காண க‌ண் கோடி வே‌ண்டு‌ம்.

காலை 6.15 ம‌ணி‌க்கு‌த் துவ‌ங்கு‌ம் சேவை இரவு 11 ம‌ணி வரை நடைபெறு‌கிறது. ஆனா‌ல் அ‌வ்வ‌‌ப்போது இறைவனு‌க்கு பூஜைக‌ள் நடைபெறு‌ம் நேர‌ங்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் சேவை ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ‌ப‌க்த‌ர்க‌ள் இறைவனை த‌ரி‌சி‌க்க அனும‌தி‌க்க‌ப்படு‌கிறது.

திரு‌ச்‌சி ‌விமான ‌நிலைய‌‌ம், பேரு‌ந்து ‌நிலைய‌‌ம், ர‌யி‌ல் ச‌ந்‌தி‌ப்பு என எ‌ங்‌கிரு‌ந்து வே‌ண்டுமானாலு‌ம் ஸ்ரீர‌ங்க‌த்‌தி‌ற்கு எ‌ளிதாக‌ச் செ‌ல்லலா‌ம். போ‌க்குவர‌த்து வச‌திக‌ள் ‌சிற‌ப்பாக உ‌ள்ளன.

Webdunia|
கோ‌யி‌ல் ‌வைபவ நா‌ட்க‌ளி‌ல் செ‌ன்றா‌ல் ‌‌சிற‌ப்பான வ‌ழிபா‌ட்டினை‌ மே‌ற்கொ‌ள்ளலா‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :