வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Sasikala
Last Modified: புதன், 23 டிசம்பர் 2015 (11:23 IST)

“முன்னோர்களின் செயல்களில் ஒளிந்திருக்கும் ஆழமான விஞ்ஞானம்”…! ஆலம் சுற்றுதல் எனும் ஆரத்தி எடுத்தல்…

காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஓன்று ஆரத்தி எடுப்பது தற்போது  நாம் இதை வெறுமேன திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். 


 
 
ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல. இதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது. நாம் தினந்தோறும் ஆரத்தி எடுப்பது கிடையாது.
 
முக்கிய நாட்களில் மட்டுமே எடுப்போம். திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பிராயணம் முடித்து வரும் நபர்கள் என இவர்களுக்கு தான் நாம் பொதுவாக ஆரத்தி எடுப்போம். நம் முன்னோர்கள் ஏன் இந்த மாதிரியான சூழலில் மட்டும் ஆரத்தி எடுத்தார்கள். 

இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணிகள் என்னவென்றால்…
 
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீர் நிரப்பி, மஞ்சள் அரைத்து சேர்த்து, அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்து தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும். அந்த சிவப்பு நீரை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து, அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகிறோம்.
 
மஞ்சள் ஓர் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்தது தான். சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு. பிரசவித்த பெண், மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பிராயணம் செய்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கிருமிகள் அதிகம் அண்டியிருக்கும்.

இந்த கிருமிநாசினி நீரில் சூடமேற்றி உடலை சுற்றுவதால், உடல் மேல அண்டியிருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். உடல் மேல் கிருமிகள் அண்டியிருக்கும் நிலையில், வீட்டுக்குள் வரும்போது அது வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும். இது அவர்களுக்கு சிறுசிறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. அதனால் தான் வாசலிலேயே ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகிறார்கள்.
 
நமது முன்னோர்கள் எதையும் வெறுமென செய்து வைக்கவில்லை. அவர்களது செயல்களில் மருத்துவமும், அறிவியலும் புதைந்து இருக்கிறது என்பதற்கு ஆரத்தி எடுக்கும் முறை மற்றுமொரு சான்றாக விளங்குகிறது. சரியான புரிதலின்மையின் காரணமாக இந்த தலைமுறையினர் இவற்றை எல்லாம் மூடநம்பிக்கை, வீண்சடங்குகள், அறிவியல் வளர்ந்த பிறகும் இதை ஏன் கடைபிடிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, நமது முன்னோர்களின் செயல்களில் ஒளிந்திருக்கும் ஆழமான விஞ்ஞானத்தை நாம் முதலில் அறிந்துக் கொள்ளவேண்டும்.